வெளிப்படையான அல்லது சட்டபூர்வமான வருமான ஆதாரம் எதுவும் இன்றி, திடீரென கணிசமான சொத்துக்களைச் சேர்த்துள்ள அல்லது ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழும் நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு ஸ்ரீலங்கா பொலிஸார் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் குறித்து நடைபெற்று வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் (CID) ஏனைய சட்ட அமலாக்க அதிகாரிகளும் இத்தகைய சம்பவங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்டதாக நம்பப்படும் சொத்துக்களை முதன்மையாகக் குறிவைத்து இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், நாடு தழுவிய ரீதியில் இதற்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன.
விசாரணைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் சமூகத்தின் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது எனக் குறிப்பிட்டுள்ள பொலிஸார், சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.