கட்டண உயர்வால் ஆடம்பர வாகனங்களைக் கைவிடும் இறக்குமதியாளர்கள்!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆடம்பர வாகனங்களை விடுவிப்பதற்கு விதிக்கப்படும் அதிகளவிலான கட்டணங்களை (detention fees) செலுத்த முடியாமல், இறக்குமதியாளர்கள் சுமார் 1,000 ஆடம்பர வாகனங்களை அங்கே விட்டுவிட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது துறைமுகத்தில் சுமார் 40,000 இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மறு-ஏற்றுமதி (re-export) நடவடிக்கைகளில் ஏற்பட்ட தடங்கல்கள் மற்றும் துபாய் போன்ற இடங்களுக்கான கப்பல் போக்குவரத்தைப் பாதித்துள்ள மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக பல வாகனங்கள் நீண்டகாலமாக அங்கேயேயுள்ளன. மறு-ஏற்றுமதிக்காக கொண்டுவரப்பட்ட வாகனங்களும் இதே நிறுத்திவைப்பு கட்டணப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளன.

சுமார் ஆறு வருடங்களாக துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஆடம்பர வாகனம் ஒன்றை விடுவிக்க உள்ளூர் இறக்குமதியாளர் ஒருவர் அண்மையில் முயன்றுள்ளார். எனினும், அதனை விடுவிக்க ஏறத்தாழ 50 மில்லியன் ரூபாய் வரை நிறுத்திவைப்பு கட்டணமாகச் செலுத்த வேண்டும் என அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த வாகனத்தின் மொத்தச் செலவு அதன் அசல் மதிப்பை விட மூன்று மடங்குக்கும் அதிகமாக உயர்ந்து, கிட்டத்தட்ட 70 மில்லியன் ரூபாயாக மாறியுள்ளது.

இந்தக் கட்டண விவரங்களை அறிந்த பின்னர், அந்த வாகனத்தை விடுவிக்க வேண்டாம் என இறக்குமதியாளர் முடிவெடுத்துள்ளதாக சுங்க அதிகாரி கூறினார்.

 கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல இறக்குமதியாளர்களும் இதே போன்ற முடிவை எடுத்து வருவதாகவும், இதனால் நூற்றுக்கணக்கான ஆடம்பர வாகனங்கள் துறைமுகத்திலேயே கைவிடப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

rauff hakeem
இம்ரான் கான் குறித்த விவாதத்தைத் தடுத்த அரசாங்கத்தைச் சாடிய ரவூப் ஹக்கீம்; கட்டாய ஜனாஸா எரிப்பை நிறுத்த அவர் ஆற்றிய பங்களிப்பையும் நினைவுகூர்ந்தார்
Aruni Ranaraja-863242
அமெரிக்காவிற்கான இலங்கையின் முதலாவது பெண் தூதுவராக அருணி ரணராஜா நியமனம்
no psta157
முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் நடைமுறைக்குச் சாத்தியமற்றது: பாராளுமன்றக் குழுவில் ‘அனைவருக்கும் நீதி’ அமைப்பு வலியுறுத்தல்
Mujibur-Rahman-L
இலங்கையில் இஸ்ரேலிய செயற்பாடுகளால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை
namal parliment
வாக்குறுதியளிக்கப்பட்ட 4 பில்லியன் டொலர் சீன முதலீடு எங்கே? அரசாங்கத்திடம் நாமல் கேள்வி!
SAJITH X
இலங்கையின் வெளியுறவுக் கொள்கை- அனைத்து நாடுகளுடனும் 'நேர்மறையான கூட்டிணைவுகளை' ஏற்படுத்த சஜித் அழைப்பு!
parliment
'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும்சட்டமூலம்பாராளுமன்றத்தில் பதற்றம்: பரந்த பொதுமக்கள் ஆலோசனைகளை எதிர்க்கட்சி வலியுறுத்தல்!
Yoshitha-new
ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்து யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னாகொட வாக்குமூலம்
Mullativu'''''''' hos
வைத்தியசாலைகளைப் பொறுப்பேற்கும் முயற்சியால் மீண்டும் சூடுபிடித்துள்ள 13ஆவது திருத்தம் குறித்த விவாதம்
wimal weera
அதிகாரத்தின் ஆணவம்: இருக்கும்போது அலட்சியப்படுத்தப்பட்டு, இழக்கும்போது உணரப்படும் ஒரு சலுகை- வீரவங்ச குடும்பத்தினர் வழங்கியுள்ள பாடங்கள்