தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் நில முறைகேடுகள்: CID மற்றும் இலஞ்ச ஒழல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க COPE பரிந்துரை!

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையில் (NHDA) இடம்பெற்ற காணி முறைகேடுகள், நிதி ஒழுங்கீனங்கள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் குறித்து முறையான விசாரணை நடாத்துவதற்காக, அது தொடர்பான விவகாரங்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிடம் (CIABOC) ஒப்படைக்குமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (COPE) பரிந்துரைத்துள்ளது.

2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகளை பரிசீலிப்பதற்கும், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தற்போதைய தொழிற்பாடுகளை மீளாய்வு செய்வதற்கும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நிஷாந்த சமரவீர தலைமையிலான கோப் குழு அண்மையில் கூடியபோதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

மாளிகாவத்தை, எல்விடிகல மாவத்தை மற்றும் தம்புள்ளை – ரங்கிரிகம ஆகிய பகுதிகளில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான பெறுமதிமிக்க காணிகளை, அமைச்சரவை அனுதியின்றி குறைந்த குத்தகை அடிப்படையில் வெளிநபர்களுக்கு வழங்கியமை, ஒப்பந்தங்களுக்குப் புறம்பான தேவைகளுக்காக அக்காணிகளைப் பயன்படுத்தியமை மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதில் தவறியமை ஆகியவை குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

குறித்த கொடுக்கல்வாங்கல்கள் பல அதிகாரசபையின் நோக்கங்களுக்கும் சட்டப்பூர்வ ஏற்பாடுகளுக்கும் முரணான வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய கோப் குழு, இந்த ஒழுங்கீனங்கள் தொடர்பில் முறையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக விரிவான அறிக்கைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் லஞ்ச ஒழல் ஆணைக்குழுவுக்கு அனுப்புமாறு பணிப்புரை விடுத்தது.

மேலும், உள்நாட்டு தணிக்கைகளை விரைவுபடுத்தி, இதற்குப் பொறுப்பான அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. எதிர்காலத்தில் இவ்வாறான முறைகேடுகள் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில் சொத்து நிர்வாகம் மற்றும் உள்நாட்டுப் கட்டுப்பாட்டு அமைப்புகளை வலுப்படுத்துமாறும் கோப் குழு பரிந்துரைத்துள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்
colombo port city
மத்திய கிழக்கு நாடுகளில்- கொழும்பு துறைமுகநகர முதலீட்டு மாநாடுகள்
NDB1
திருடப்பட்ட 13.64 பில்லியன் ரூபாயையும் டிஜிட்டல் சொத்துக்களையும் கண்டறிய NDB வங்கி வெளிநாட்டு நிறுவனத்தை நியமித்துள்ளது
tourists175
ஜப்பான், ஆஸ்திரேலியா சந்தைகளின் வளர்ச்சியால் செப்டம்பர் மாத சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிப்பு
fdi
இலங்கையின் முதலீட்டு சூழல் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொள்கின்றது – அமெரிக்கா
Online1 loan
இணையவழி கடன்வழங்கும் நிறுவனங்கள்- சிஐடி விசாரணைகள் ஆரம்பம்
plane121
விமானிகளுக்கு இடையே மோதல் - துபாயிலிருந்து இஸ்ரேல் சென்றுகொண்டிருந்த விமானம் அவசர அவசரமாக சவுதியில் தரையிறங்கியது
sajith 5
வறுமைத் தரவுகள் பொய்யானவை: அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர்
iran war 10
மத்திய கிழக்கு பதற்றம் இலங்கையை 6 பொருளாதார முனைகளில் அச்சுறுத்துகிறது: ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) எச்சரிக்கை
imf srilanka
2027 உடன் முடிவடையும் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் - அதன் பின்னர் என்ன நடைபெறும்- இலங்கைக்கான பிரதிநிதி கருத்து