ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் முன்னாள் அதிகாரியின் மரணம்: பிரேதப் பரிசோதனை அறிக்கையை விரைவாகச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள்  அதிகாரி (CEO) கபில சந்திரசேனவின் சந்தேகத்திற்குரிய மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை அறிக்கையை தாமதமின்றி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பிரதம சட்ட மருத்துவ அதிகாரிக்கு (Chief JMO) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று மீண்டும் நினைவூட்டல் அறிவித்தல் அனுப்பியுள்ளது.

இவ்வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் (CCD) அதிகாரிகள் நீதிமன்றில் கருதுரைக்கையில்; பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தயாரிப்பதற்குத் தேவையான அரசாங்க பகுப்பாய்வாளரின் பல அறிக்கைகள் ஏற்கனவே பிரதம சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இருப்பினும், இதுவரை ஒரு அரசாங்க பகுப்பாய்வாளர் அறிக்கை மட்டுமே உத்தியோகபூர்வமாகச் சட்ட மருத்துவ அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய பல அறிக்கைகள் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை என்றும் புலனாய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.

உயிரிழந்தவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை இறுதி செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமாயின், தொடர்புடைய அனைத்துப் பகுப்பாய்வு அறிக்கைகளும் முழுமையாகப் பெறப்பட வேண்டும் என்றும் அவர்கள் நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தினர்.

நீதிமன்ற உத்தரவு:

புலனாய்வு அதிகாரிகளின் விளக்கங்களைக் கவனத்தில் கொண்ட நீதவான், பிரேதப் பரிசோதனை அறிக்கையை விரைவாகச் சமர்ப்பிக்குமாறு பிரதம சட்ட மருத்துவ அதிகாரிக்கு மீண்டும் நினைவூட்டல் அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்டார்.

அத்துடன், இம்மாணத்துடன் தொடர்புடைய நிலுவையிலுள்ள ஏனைய அரசாங்க பகுப்பாய்வாளர் அறிக்கைகளையும் தாமதமின்றி விரைவுபடுத்திச் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் பணித்துள்ளது.

இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது