“சீனா எவ்வளவு வலிமையடைகிறதோ, அவ்வளவுக்கு உலக அமைதி வலுப்பெறும்!” — சீனத் தூதுவர் சீ சென்ஹொங் கருத்து

சீனா எவ்வளவு வலிமையடைகிறதோ, அந்தளவுக்கு உலக அமைதி மேலும் வலுப்பெறும். சீனாவின் வளர்ச்சி, உலகின் செழிப்புக்கு வழிவகுக்கும்” என இலங்கைகான சீனத் தூதுவர் சீ சென்ஹொங் (Qi Zhenhong) தெரிவித்துள்ளார்.

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) 99ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன், இலங்கைகான தனது இராஜதந்திர சேவை நிறைவடடைவதை முன்னிட்டு அவர் இதன்போது தனது விடைபெறும் உரயையும் ஆற்றினார்.

இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் சார்பில் உரையாற்றிய தூதுவர் சீ சென்ஹொங், சீனப் பாதுகாப்பு மற்றும் இராணுவ நவீனமயமாக்கல் முயற்சிகளுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 105ஆவது ஆண்டு நிறைவு, ‘நீண்ட பயண’ (Long March) வெற்றியின் 90ஆவது ஆண்டு நிறைவு மற்றும் நாட்டின் 15ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஆரம்ப ஆண்டு என பல வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகள் நடப்பாண்டில் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சீனத் தூதுவரின் முக்கிய உரைக் குறிப்புகள்:

  • இராணுவ நவீனமயமாக்கல்: “சீனாவின் மகத்தான சாதனைகளுக்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வலுவான தலைமையே அடிப்படை உத்தரவாதமாகும். அதிபர் ஷி ஜின்பிங்கின் இராணுவத் தொலைநோக்குப் பார்வையின் கீழ், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உலக அமைதிக்குப் பங்காற்றவும் சீன மக்கள் விடுதலை இராணுவம் தனது போர்த் திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.”

  • உலகளாவிய அமைதி: “அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் ஆதிக்க அரசியலுக்கு மத்தியில், ஐக்கிய நாடுகள் சபையை மையமாகக் கொண்ட சர்வதேச கட்டமைப்பு மற்றும் சர்வதேச சட்டங்களை நிலைநிறுத்த சீனா உறுதிபூண்டுள்ளது. அணிசேராமை, மோதல்களற்ற தன்மை மற்றும் எந்தவொரு மூன்றாம் தரப்பினரையும் இலக்கு வைக்காத வெளியுறவுக் கொள்கையையே சீனா பின்பற்றுகிறது.”

  • இலங்கை – சீனா உறவு: “பாதுகாப்பு ஆலோசனைகள், பணியாளர் பயிற்சிகள் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் மூலம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராணுவ உறவுகள் தொடர்ந்தும் பலமடைந்து வருகின்றன. இலங்கையுடன் இணைந்து மூலோபாய நம்பிக்கையைக் கட்டியெழுப்பவும், பரஸ்பரம் ஆதரவளிக்கவும் சீனா எப்போதும் தயாராகவுள்ளது.”

உணர்ச்சிப்பூர்வமான விடைபெறல்: 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கைகான சீனத் தூதுவராகப் பதவியேற்ற சீ சென்ஹொங், தனது பதவிக்காலம் நிறைவடைவதை முன்னிட்டு நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு விடைபெறும் செய்தியையும் பகிர்ந்துகொண்டார்.

“இங்கு எனது இராஜதந்திர பணி நிறைவடைந்தாலும், இலங்கை மக்கள் மீதும் எனது நண்பர்கள் மீதும் நான் வைத்துள்ள அன்பு என்றும் குறையாது. இலங்கை மேலும் செழிப்பையும், ஸ்திரமான வளர்ச்சியையும் அடைய வாழ்த்துகிறேன்” என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்
75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்