இலங்கை தனது அந்நியச் செலாவணி கையிருப்பை 15பில்லியன் டொலர்களாக உயர்த்த தவறினால் 2028ம் ஆண்டு இறுதிக்கு பின்னர் நாடு மீண்டும் ஒரு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்
நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு இன்னமும் கிடைக்கவில்லை,கடன்களை மீள செலுத்த ஆரம்பிக்கும்போது அடுத்த கட்ட சவால்கள் ஆரம்பமாகும்.
2026 இறுதிக்குள் அந்நிய செலாவணி கையிருப்பு 8 மில்லியன் டொலர்களை மாத்திரம் எட்டும் என மத்திய வங்கி எதிர்பார்க்கின்றது.2028ம் ஆண்டுக்குள் தேவைப்படும் 15 மில்லியன் டொலர் இலக்கை எவ்வாறு எட்டுவது என்பது குறித்து தெளிவான திட்டமிடல்கள் இல்லை.
2028ம் ஆண்டுக்கு பிந்தைய காலகட்டத்தை இலங்கையின் மூன்றாவது போர் என குறிப்பிடலாம் நாம் இந்த போரில் வெற்றிபெறாவிட்டால் நாடு பெரும் ஆபத்தில் சிக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
