சிராந்திக்கு இதயசத்திரசிகிச்சையா? உடனடியாக உறுதிப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் முதல்பெண்மணி சிராந்திராஜபக்சவிற்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இதய சத்திரசிகிச்சை இடம்பெறுவதாகஅவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளதை உடனடியாக ஆராய்ந்து உறுதிப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிராந்தி ராஜபக்ச சிறைச்சாலையில் இருந்தவேளை திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலை இதய சத்திரசிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார் என அவரது சட்டத்தரணி  நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
நீதிமன்ற அமர்வின் போது அவர் இதனை தெரிவித்தார்.
எனினும் அரசதரப்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் சிராந்தி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் சத்திரசிகிச்சை செய்யப்படுவதாக எந்த தகவலும் இல்லை என தெரிவித்தார்.
முரண்பட்ட சமர்ப்பணங்களை தொடர்ந்து சிராந்தி ராஜபக்சவிற்கு சத்திரசிகிச்சை செய்யப்படுகின்றதா என்பதை விசாரித்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

police11
வினோத உடைப் போட்டியில்செம்மணியில் புதையுண்ட சிறுவனாக தோன்றிய மாணவன் - பெற்றோர் பொலிஸ் விசாரணைக்காக அழைப்பு
sajith 5
பௌத்தமதகுருவின் காவியுடையை சாதாரண மக்கள் களைவதற்கு உரிமையில்லை - இது கண்டிக்கப்படவேண்டிய விடயம் - சஜித்
imf4
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி – சர்வதேச நாணயநிதியத்தின் எதிர்வுகூறல் என்ன?
psta no1
இன்று மதியம் 1.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக – அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை கிழித்தெறி
anura may 26
சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்திலிருந்து விலகுவதா அல்லது புதிய திட்டத்தில் இணைவதா? அனுர தெரிவித்திருப்பது என்ன?
court-judge-hammer-gavel-696x398
அனுரகுமாரவின் மனைவி என்றால் பொலிஸார் இப்படி செயற்பட்டிருப்பார்களா? நீதிமன்றத்தில் சிராந்தி சட்டத்தரணி
gnasaraa
ஞானசார தேரர் கடும் மன உளைச்சலில்- நஞ்சருந்தி உயிர்துறக்கப்போவதாக தெரிவித்தார்- பௌத்தமதகுரு
Malwathu Mahanayake Pushes Back on SJB Claims 1-858629
மக்கள் ஆதரவை இழந்துவரும் அரசாங்கம் பௌத்தர்களின் நலன்களை விட்டுக்கொடுத்து சிறுபான்மையினத்தவர்களை திருப்திப்படுத்தமுயல்கின்றது – பௌத்தபீடாதிபதியிடம் ஐக்கிய மக்கள் சக்தி
Chamara_Sampath_1200x675px_06_08_25
சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?
batti land
மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்