Melani Gunathilaka
இன்று மதியம் 1.30 மணிக்கு நாங்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச்செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி போராட்மொன்றை நடத்தவுள்ளோம்.
இந்த சட்டமூலம் நாட்டின் அனைத்து பிரஜைகளினது பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

செப்டம்பர் 22 ம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இந்த சட்டத்தின் மூலம் பழைய பயங்கரவாத தடைச்சட்டம் இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் அதற்கு பதிலாக இன்னுமொரு கொடுரமான சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தில் பயங்கரவாதம் என்றால் என்னவென்பது தெளிவாக வரையறுக்கப்படவில்லை,பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல், சூழலுக்கு சேதம் ஏற்படுத்துதல் போன்றவையும் கணிணி அமைப்புகளுக்கு சேதம் எற்படுத்துதல், கலாச்சார பாரம்பரியங்களை சேதப்படுத்துதல் கூட பயங்கரவாதமாக கருதப்படலாம்.
சர்வதேசதரநிலைகளின்படி ஒரு செயல் பயங்கரவாதமாக மாறவேண்டுமாயின் உயிரிழப்பு காயங்களை ஏற்படுத்துதல்,அல்லது கடத்தி செல்லுதல் போன்ற நோக்கங்கள் இருக்கவேண்டும்,ஆனால் இதில் அது இல்லை.
பொலிஸார் இராணுவத்தினர் கடலோர காவல்படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டால் பிடியாணையின்றி எவரையும் கைதுசெய்ய முடியும்.
போராட்டங்கள் வேலைநிறுத்தங்களுக்கு இது பொருந்தாது என குறிப்பிடப்பட்டிருந்தாலும்,அத்தகைய சந்தர்ப்பங்களில் ஒருவர் பயங்கரவாத தமைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டால் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கவேண்டியிருக்கும்.இதற் அதிக செலவாகும் மேலும் 30 நாட்களுக்குள் வழக்கு தாக்கல் செய்யவேண்டும், இது சாதாரண மனிதனுக்கு இலகுவான விடயமல்ல.
தடுப்புக் காவலில் வைப்பதற்கான உத்தரவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் தகவல்களைப் பரிசீலிக்கும் ஒரு நீதிபதி வழங்க மாட்டார், மாறாக ஒரு அதிகாரியே வழங்குவார். ஒரு நபரை 2 மாதங்கள் வரை பொலிஸ் காவலில் வைப்பதற்கு பாதுகாப்புச் செயலாளரால் உத்தரவு பிறப்பிக்க முடியும். நீதவானால் அதனை நிராகரிக்க முடியாது. சட்ட உதவியோ, தவறாகக் கைது செய்யப்பட்டால் இழப்பீடோ கிடையாது. ஏற்கனவே பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் பல வருடங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, பின்னர் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்ட மனிதர்கள் எமது நாட்டில் வாழ்கின்றனர். அவர்களின் இழக்கப்பட்ட வாழ்க்கைக் காலத்திற்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் (PTA) கூட இல்லாத அதிகாரங்கள் இந்தப் புதிய சட்டத்தில் உள்ளன. பேரணிகள், கூட்டங்கள், ஊர்வலங்களைத் தடை செய்ய பொலிஸாரால் முடியும். எந்தவொரு அமைப்பையும் காலவரையறையின்றி தடை செய்ய ஜனாதிபதியால் முடியும். உங்களது பயணங்கள், தொடர்பாடல்கள் மற்றும் நீங்கள் சந்திக்கும் நபர்கள் குறித்தும் கட்டுப்பாடுகளை விதிக்க முடியும்.
இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களுக்குத் தண்டனை வழங்குவதற்கென வேறு சட்டங்கள் ஏற்கனவே இலங்கையின் சட்ட அமைப்பில் உள்ளன. தண்டனைச் சட்டக்கோவை, ஊழல் எதிர்ப்புச் சட்டம், ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டம், குற்றச் செயல்களின் மூலம் பெறப்பட்ட வருமானம் மற்றும் பணச்சலவை தடுப்புச் சட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. அந்த வழக்குகளுக்குத் தேவை சுயசார்பற்ற புலனாய்வுகளும் விரைவான வழக்கு விசாரணைகளுமே அன்றி, குற்றச்சாட்டுகள் இன்றி தடுப்புக் காவலில் வைப்பது அல்ல. 47 வருடங்களாகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அரசியல் எதிரிகளுக்கும் விமர்சகர்களுக்கும் எதிராகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்பது இரகசியமான ஒன்றல்ல.
தேசிய மக்கள் சக்தி (NPP), தமது கொள்கைப் பிரகடனத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதாகப் போலி வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது அதைவிடக் கொடூரமான சட்டத்தை வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
இலங்கைப் பிரஜைகளின் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்காக, போராட்டம் நடத்தும் சுதந்திரத்திற்காக, சுதந்திரமான பிரஜைகளாக வாழ்வதற்கான உரிமையாக்காக இன்று மதியம் 1.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ளுங்கள்.
அதேபோன்று உங்களுக்குத் தெரிந்த தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களிடமும், உங்களது நாடாளுமன்ற உறுப்பினரிடமும் இந்த வாக்குறுதி மீறல் குறித்துக் கேள்வி எழுப்புங்கள்.