இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2026 இல் 4 வீதமாகவும் 2027 இல் 3.7 வீதமாகவும் காணப்படும் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணயநிதியம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது
2025 இல் இலங்கையின் பொருளாதா வளர்ச்சி ஐந்துவீதமாக காணப்பட்டபோதிலும் 2026-27 இல் அதன் வளர்ச்சி மந்தகதியிலேயே காணப்படும் என எதிர்பார்க்கப்படுகி;ன்றது.
2026 இல் பணவீக்கம் 5.3 வீதமாகவும் 2027 இல் 5.4 வீதமாகவும் காணப்படும்.
வேலைவாய்ப்பின்மை 2026-27ம் ஆண்டுகளில் 3.9 வீதமாக காணப்படும்
சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி மிகவும் மந்தகதியிலேயே காணப்படும் 2026 இல்; 3.1வீதமாக வீழ்ச்சியடையும் பொருளாதார வளர்ச்சி 2027 இல் 3.4 வீதமாக அதிகரிக்கும் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.