புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் காரணமாக அரசாங்கத்தை எதிர்க்கும் எவரும் பயங்கரவாதிகள் என கருதப்படும் நிலைமை உருவாகும் என அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்
அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் வாக்குறுதிகளில் உறுதியளித்த முக்கியமான விடயம் பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட அனைத்து ஒடுக்குமுறை சட்டங்களையும் நீக்குவோம் என்பதாகும்.

தற்போது தங்கள் வாக்குறுதியை மீறி செயற்படும் அவர்கள் அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
யாருடை தேவைக்காக என்ன நோக்கத்திற்காக இந்த சட்டமூலத்தை கொண்டுவருகின்றீர்கள் என நாங்கள் கேள்விஎழுப்புகின்றோம்.
ஆகவே எங்களுக்கு தெளிவாக தெரிவது என்னவென்றால் முதலாளித்து அரசாங்கங்கள் தொடர்ச்சியாக 1979 முதல் பல்வேறு சட்டங்களை கொண்டுவருவதன் மூலம் மக்களை இலக்குவைத்துள்ளன.தற்போது வடக்கிலும் தெற்கிலும் மீனவர்களும் விவசாயிகளும் உழைக்கும் வர்க்கத்தினரும் தங்களின் வாழ்வாதாரம் உயிர் உரிமைக்காக தொடர்ச்சியாக வீதிகளில் இறங்குகின்றனர்.இந்த மக்களை ஒடுக்குவதற்காக மிகவும் கடுமையான புதிய சட்டத்தை கொண்டுவர முயல்கின்றனர்.
இந்த புதிய சட்டத்தின் கீழ் அதிகாரம் பொலிஸாருக்கு மாத்திரம் வழங்கப்படவில்லை, முப்படையினர் கரையோர காவல்படையினருக்கும் அதிகாரங்களை வழங்குகின்றது.
பயங்கரவாதம் குறித்த பரந்துபட்ட தெளிவற்ற வரைவிலக்கணத்தை இந்த சட்டடமூலம் கொண்டுள்ளது இதன் காரணமாக அரசாங்கத்தை எதிர்க்கும் எவரும் பயங்கரவாதி என குற்றம்சாட்டப்படும் நிலை உருவாகும்.இது 1971 மற்றும் 88-89ம் ஆண்டுகளில் நாங்கள் சந்தித்த இரத்தக்களறி மிகுந்த வரலாற்றை நினைவுபடுத்துகின்றது.
அதிகரித்து வரும் வாழ்வாதாரத்தை சகித்துக்கொள்ள முடியாததால்,மக்கள் வீதிகளில் இறங்க தொடங்கியுள்ளனர்.
பல்தேசிய நிறுவனங்கள் ஏற்கனவே அம்பாந்தோட்டையில் 6000 ஏக்கர் நிலத்தை சுவீகரித்துள்ளன.என அவர் தெரிவித்துள்ளார்.