அரசாங்கம் தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் எதிர்காலத்தில் அது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல்களை உருவாக்கும் என முன்னிலை சோசலிஷ கட்சியின் துமுந்த நாகமுவ தெரிவித்துள்ளார்
கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் எதிர்காலத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்படும்.
இன்று நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்கவில்லை என்றால் எதிர்காலத்தில் இந்த அரசியல் சமூகமும் மக்களும்,காவல்துறை மீதும் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் மீதும் கல்வீசும் சூழ்நிலை உருவாகும்.
அப்போது நாங்கள் ஏன் சொன்னோம் என்பது விளங்கும் என அவர் தெரிவித்தார்