வசந்த முதலிகே
நீங்கள் இதனை வாசிக்கவேண்டும்.
இந்த நாட்டில் எவராவது ஆர்ப்பாட்டம் செய்தால், பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டால், துண்டுபிரசுரங்களை விநியேகம் செய்தால்,சமூக ஊடக பதிவுகளை பகிர்ந்துகொண்டால் அவரை ஒரு மாதகாலத்திற்குள் பயங்கரவாதியாக மாற்றக்கூடிய சட்டமூலமொன்றை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயல்கின்றது.
இந்த சட்டமூலம் அரசாங்கத்தை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கான சட்டமூலம் என பெயரிடப்பட்டுள்ளது.
இவ்வாறான சட்டம் மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கே வழிவகுக்கின்றது என தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக தெரிவித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே இதனை கொண்டுவருகின்றது என்பதே பெரும் துன்பியல் விடயம்.
2018 இல் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது – பலர் நீதிமன்றம் சென்றனர்,ஜேவிபியும் நீதிமன்றம் சென்றது.மீண்டும் 2023-24 இல் இரண்டு தடவை கொண்டுவரப்பட்டது,அதற்கு எதிராக பலரும் நீதிமன்றம் சென்றனர், தேசிய மக்கள் சக்தியும் சென்றது,
அவ்வேளை நீதிமன்ற முயற்சிகள் மூலம் தோற்கடிக்கப்பட்ட சட்டமூலத்தை தற்போது வேறுவடிவில் கொண்டுவருவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே முயல்கின்றது.
இந்த சட்டமூலத்தில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது
உரத்தை கோரி இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயி உரஅலுவலகத்தை சேதப்படுத்தினால் அது பயங்கரவாதம்.
பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் அல்லது பேரணியின் போது ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரால் பொலிஸார் தாக்கப்பட்டால் அதுவும் பயங்கரவாதம்.
இந்த சட்டமூலத்தின் கீழ் காலிமுகத்திடல் அரகலயவும் பயங்கரவாதம்.
ஒருவர் பயங்கரவாதி என அவர் இழைத்த குற்றத்திற்காக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால் அவரது குடும்பத்தினர் உறவினருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கலாம்.
இந்த சட்டமூலத்தை தோற்கடிக்கவேண்டும்.
தனிப்பட்ட அரசியல் விசுவாசங்களை கைவிட்டுவிட்டு உங்களை இந்த போராட்டத்தில் இணையுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.