சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணப்படும் சட்ட விதிகள் மற்றும் நிலையான கட்டளைகளைப் புதுப்பிப்பதற்கான விசேட குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிப்பு

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்ட விதிகள் மற்றும் நிலையான கட்டளைகளைப் புதுப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் இடைக்கால அறிக்கை இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்
குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
முப்பீடங்களைச் சேர்ந்த மகா சங்கத்தினருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையில் கடந்த 08 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த விசேட குழு நியமிக்கப்பட்டது. குறித்த விடயங்களை ஆராய்ந்து இரண்டு வாரங்களுக்குள் புதிய சட்ட விதிகள் மற்றும் நிலையான கட்டளைகளைத் திருத்துவதற்கான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும் பொறுப்பு இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கமைய, பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய மதகுருமார்களை சிறைச்சாலையில் தடுத்து வைக்கையில் அமுல்படுத்தப்பட்ட சட்டவிதிகளுக்கான திருத்த யோசனைகள் இந்தக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
குழுவின் தலைவராக செயற்பட்ட புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீரவினால் இந்த இடைக்கால அறிக்கை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. குழுவின் உறுப்பினர்களான நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் பியுமந்தி பீரிஸ், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்த ஆரியரத்ன, பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஜே. சேனாரத்ன மற்றும் சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர்களில் ஒருவரான ஏ.சீ. கஜநாயக்க ஆகியோரும் இந்தநிகழ்வில் கலந்துகொண்டனர்
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

ANURA10
சவுதி அரேபியாவிற்கு நன்றி தெரிவித்தார் அனுரா- அனோஜனுக்கு தொடர்ந்தும் உதவி
gna11
சிறைச்சாலையிலிருந்து வெளியே செல்லும்போது பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கவேண்டும் - ஜனாதிபதி நியமித்த குழு பரிந்துரை
lalkantha1
குற்றமிழைத்தவர்களை தண்டியுங்கள் காவியுடையை தண்டிக்காதீர்கள் - சிலர் தங்கள் நிகழ்ச்சிநிரலுக்காக ஞானசார தேரரை பயன்படுத்துகின்றனர்- லால்காந்த
velmurugan
தமிழர் நிலங்களில் இன்னும் இராணுவம் எதற்காக?
846375662_1429388159407679_5413946223460394141_n
நாளைநீங்களும் ஒரு பயங்கரவாதியே
Namal-750x422
எயார்பஸ்கொள்வனவு நிதி மோசடி வழக்கு விசாரணைகள் பூர்த்தி – நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை
848439274_1515610073946247_4869239988910910059_n
அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கத்துக்கு அவுஸ்திரேலியாவில் உணர்வுபூர்வ அஞ்சலி
image_019305f562
ஞானசார தேரரின் காவியுடை சிறைச்சாலைக்குள் முறையற்ற விதத்தில் களையப்படவில்லை- சிறைச்சாலைகள் அதிகாரி
Mahinda-1
மகிந்த தொடர்ந்தும் மருத்துவமனையில் - இதற்குமேல் தெரிவிக்க முடியாது என்கின்றார் பெரமுன உறுப்பினர்
846667725_1429388089407686_7253509041047390376_n
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் வேண்டாம் - மக்களை பாதுகாக்கும் சட்டமூலத்தை கொண்டுவாருங்கள் -அருட்தந்தை சக்திவேல்