வடக்கு கிழக்குமுழுவதும் இராணுவமயமாக்கல் ஆழமாக வேரூன்றியுள்ளது- போர் முடிந்து 17 வருடங்கள் இன்னமும் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன – இலங்கை மனித உரிமை ஆணைக்குழு

இலங்கையில் உள்நாட்டு போர் முடிவடைந்து 17 ஆண்டுகளாகியுள்ள போதிலும் போரின் மூலம் உருவான பல மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கடும் கவலை வெளியிட்டுள்ளது
மனித உரிமை ஆணைக்குழு வடக்குகிழக்கில் காணப்படும் மனித உரிமை நிலவரம் குறித்து விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
உண்மை நீதி காணிஉரிமைகள் மதசுதந்திரம் வாழ்வாதாரம் மற்றும் அர்த்தபூர்வமான நல்லிணக்கம் ஆகியவற்றை பெற்றுக்கொள்வதில் இலங்கையின் வடக்குகிழக்கு மாகாண மக்கள் தொடர்ந்தும் பெரும் தடைகளை எதிர்கொள்கின்றனர்.

 


யுத்தத்தின் பாரம்பரியம்,பாரபட்சம், இடம்பெயர்வு,மற்றும் தண்டனையிலிருந்து விலக்களித்தல் போன்றவற்றால் வடக்குகிழக்கின் தமிழ் முஸ்லீம் மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர்.
பலவந்தமாக காணாமலாக்கப்படுதல்,பாரிய மனித புதைகுழிகள், நினைவுகூருதல்,இராணுவமயப்படுத்தல், கண்காணிப்பு, அச்சுறுத்தல், காணி தகராறு,வடபகுதி முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டமை,மதசுதந்திரம் அபிவிருத்தி திட்டங்கள் வாழ்வாதாரத்திற்கான அச்சுறுத்தல் போன்றன முக்கிய பிரச்சினைகளாக உள்ளன.
காணாமல்போன ஆயிரக்கணக்கானவர்களின் நிலையை உறுதிப்படுத்த தவறியுள்ளமை கடும் கரிசனையை ஏற்படுத்துகின்றது.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் தாங்கள் தொடர்ந்தும் தடைகளை எதிர்கொள்வதாகவும்,மீண்டும் மீண்டும் தங்களிடம் ஆவணங்களை கோருவதாகவும்,தங்களின் அன்புக்குரியவர்களின் நிலை பற்றிய உண்மையை தெரிவிப்பதற்கு பதில் இழப்பீடுகளை பெற்றுக்கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் மனித உரிமை ஆணைக்குழுவிடம் தெரிவித்தனர்.
இவர்கள் நீதியை பெறுவதற்கான முயற்சிகளின் போது தொடர்ந்தும் துன்புறுத்தல்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றனர்.
யாழ்ப்பாணம் செம்மணியில் 580க்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன,இந்த விடயத்தில் தடயவியல் திறன்,மரபணுபரிசோதனை,மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான ஆகியவற்றில் தீவிர குறைபாடுகள் காணப்படுகின்றன.
தேசிய மரபணு வங்கியொன்றை உருவாக்குவதுடன்,சர்வதேச தராதரத்திற்கு ஏற்ப விசாரணைகளை மேற்கொள்வதற்கான வலுவான பொறிமுறைகளை உருவாக்கவேண்டும்.
வடக்கு கிழக்கில் நினைவேந்தல்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் நடவடிக்கைகள்,நீதிமன்ற உத்தரவு மற்றும் சட்டங்கள் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுகின்றன.
அரசியல் சார்புகளுக்கு அப்பாற்பட்டு குடும்பங்களுக்கு உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான உரிமையுண்டு.
நினைவேந்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்துவது நல்லிணக்கத்தையும் கருத்து சுதந்திரத்தையும் சீர்குலைப்பதாக அமையும்.
வடக்கு கிழக்குமுழுவதும் இராணுவமயமாக்கல் ஆழமாக வேரூன்றியுள்ளது,தனியார் காணிகளை இராணுவம் தொடர்ந்தும் ஆக்கிரமித்து வைத்துள்ளது,என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Screenshot_20261015_224645_Editor-Lite
பௌத்தமதகுருமார் தற்போது ஜனாதிபதி செயலகத்தின் முன்னாலிருந்து விலகி காலிவீதியின் மறுபக்கத்தில்
Mahinda-1
மகிந்தவிற்கு மருந்துகொடுக்க சிராந்தி தேவை- பெரமுன
MediaFile_20261015_120159_758
ஜனாதிபதி செயலகத்தின் அருகில் தற்காலிக கூடாரத்தை அமைத்து தங்கியியுள்ள பௌத்தமதகுருமார்
Screenshot_20261015_192923_YouTube
பேச்சுவார்த்தை தோல்வி- ஜனாதிபதி செயலகத்திலிருந்து விலகிச்செல்வதற்கு பௌத்த மதகுருமார் மறுப்பு
கால்நடை உற்பத்தியை அதிகரித்து, பாலையும் இறைச்சியையும் பெறுமதிசேர் பொருட்களாக வடக்கிலேயே தயாரிக்க ஒத்துழைப்பு தேவை – ஆளுநர்
un human right off
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தில் படையினருக்கு வழங்கப்பட்டுள்ள பரந்துபட்ட அதிகாரங்களை நீக்கவேண்டும் - சட்டமூலத்தில் கணிசமான மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் - ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம்
pak school
பாக்கிஸ்தானில் பாடசாலை கூரை இடிந்து விழுந்ததில் 27 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
Sonali Jain-Chandra IMF-858917
இலங்கைக்கு அடுத்தது என்ன? தனது ஆதரவு எந்த வடிவத்திலும் தொடரும் என்கின்றது சர்வதேச நாணயநிதியம்
rajeev1111
மரண தண்டனை இரத்து நம்பிக்கையளிக்கின்றது -அனோஜன் விடுதலையாகி பாதுகாப்பாக குடும்பத்தினருடன் இணையும் தருணத்தையே உண்மையான வெற்றியாக கருத முடியும்- ராஜ்குமார் ரஜீவ்காந்
Dayan-Jayatilleka
மாகாணசபைதேர்தல்கள் குறித்து அரசாங்கத்திற்கு அக்கறையில்லை – அரசாங்கம் தேர்தலை நடத்தாது- தயான் ஜயதிலக