பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை அரசாங்கம் விலக்கிகொள்ளவேண்டும் – டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல்

அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் விலக்கிக்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள டிரான்பரன்சி இன்டநஷனல் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தில் உள்ள ஏற்பாடுகள்அடிப்படை உரிமைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம், நீதித்துறையின் சுயாதீன தன்மையை பலவீனப்படு;த்தலாம்,ஜனநாயக சுதந்திரத்தை மட்டுப்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றில் டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல் மேலும் தெரிவித்துள்ளதாவது
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தில் பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணம் பரந்துபட்டதாக காணப்படுகின்றது,நிறைவேற்று அதிகாரத்திற்கு அளவுக்கதிகமான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது,தடுத்துவைத்தல் மற்றும் சிவில் உரிமைகளை மட்டுப்படுத்தல் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளை கொண்டுள்ளது.
சொத்துக்களை சேதப்படுத்துதல், சூழலிற்கு பாதிப்பை ஏற்படுத்துதல்,கலாச்சார பொருட்கள் இலத்திரனியல் பொருட்களுக்கு சேதத்தை ஏற்படுத்துதல் போன்றவையும் பயங்கரவாதம் என்ற பரந்துபட்ட வரையறைக்குள் அடங்குகின்றன,இத்தகைய பரந்த அளவிலான சரத்துக்கள் கருத்துசுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரத்தின் மீதும், சட்டபூர்வமான குடிமைசெயல்பாடுகள் மீதும்.அளவுக்கதிகமான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு வழிவகுக்க கூடும்.
இராணுவத்தினருக்கும் எல்லைக்காவல்படையினருக்கும் சோதனையிடுதல் கைதுசெய்தல் பறிமுதல் செய்தல் போன்றவற்றிற்கான அதிகாரங்களை இந்த சட்டமூலம் வழங்குகின்றது,போதிய பாதுகாப்பு வழிமுறைகள் இல்லாமையால் இது பொறுப்புக்கூறலில் இடைவெளியை உருவாக்கி, தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கான ஆபத்தை அதிகரிக்கும் என டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல் தெரிவித்துள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரான் கப்பல்கள் - இந்தியாவின் உதவியை நாடியதா ஈரான்?
HARINI JULY
ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என வேண்டுகோள்கள் - பிரதமர் தெரிவிப்பது என்ன?
sajith 5
பௌத்தமதகுருமாரின் காவியுடையை தொடவேண்டாம் - பொலிஸாரின் நடவடிக்கை ஜனநாயகவிரோத செயல் ; என்கின்றார் சஜித்
Screenshot_20261015_224645_Editor-Lite
பௌத்தமதகுருமார் தற்போது ஜனாதிபதி செயலகத்தின் முன்னாலிருந்து விலகி காலிவீதியின் மறுபக்கத்தில்
Mahinda-1
மகிந்தவிற்கு மருந்துகொடுக்க சிராந்தி தேவை- பெரமுன
MediaFile_20261015_120159_758
ஜனாதிபதி செயலகத்தின் அருகில் தற்காலிக கூடாரத்தை அமைத்து தங்கியியுள்ள பௌத்தமதகுருமார்
Screenshot_20261015_192923_YouTube
பேச்சுவார்த்தை தோல்வி- ஜனாதிபதி செயலகத்திலிருந்து விலகிச்செல்வதற்கு பௌத்த மதகுருமார் மறுப்பு
கால்நடை உற்பத்தியை அதிகரித்து, பாலையும் இறைச்சியையும் பெறுமதிசேர் பொருட்களாக வடக்கிலேயே தயாரிக்க ஒத்துழைப்பு தேவை – ஆளுநர்
un human right off
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தில் படையினருக்கு வழங்கப்பட்டுள்ள பரந்துபட்ட அதிகாரங்களை நீக்கவேண்டும் - சட்டமூலத்தில் கணிசமான மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் - ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம்
missing protest
வடக்கு கிழக்குமுழுவதும் இராணுவமயமாக்கல் ஆழமாக வேரூன்றியுள்ளது- போர் முடிந்து 17 வருடங்கள் இன்னமும் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன - இலங்கை மனித உரிமை ஆணைக்குழு