இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரான் கப்பல்கள் – இந்தியாவின் உதவியை நாடியதா ஈரான்?

இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களுக்கு அவசியமான விநியோகத்தினை ஈரான் இந்தியாவின் உயர்மட்ட தலைவர்களை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள 20 கப்பல்களில் இந்திய மாலுமிகள் இருப்பதையும் அவர்கள் உணவு குடிநீர் எரிபொருள் போன்றவை இன்மையால் ஆபத்தான கட்டத்தில் உள்ளதையும் சுட்டிக்காட்டி இந்த விடயத்தில் தலையிடுமாறு ஈரான் இந்தியாவை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியாவிடம் தாங்கள் விடுத்த வேண்டுகோளிற்கான பதில் என்னவென இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஈரானிய தூதரகம் வினவியுள்ளது.
ஈரானிய கப்பல்களுக்கு சேவை வழங்குவது குறித்து அமெரிக்கா எச்சரித்துள்ளதன் பின்னணியிலேயே இந்த விடயங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்திய ஈரான் பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் குறித்து தகவல் எதுவும் இல்லாத போதிலும், இந்தியா இந்த விடயத்தில் ஈரான் கப்பல்களுக்கு உதவுவதற்கு முன்வராது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் அச்சுறுத்தலால் இலங்கையும் இந்தியாவும் தர்மசங்கடமான நிலையில் உள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவால் தனது கொல்லைபுறத்தில் உள்ள ஈரானிய கப்பல்களில் இந்தியர்களும் சிக்குண்டுள்ளதை புறக்கணிக்க முடியுமா, என்ற கேள்வி எழுந்துள்ளது.

(THE ISLAND)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

laxman k
நான் சிறுபான்மையினத்தவர்களை விமர்சிக்கவில்லை- லக்ஸ்மன் கிரியல்ல
Prison-officials-Mahanayaka-Theras
ஞானசாரரை விடுதலை செய்யவேண்டும் - சிறைச்சாலை அதிகாரிகளிடம் அஸ்கிரிய பீடாதிபதி
transparancy
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை அரசாங்கம் விலக்கிகொள்ளவேண்டும் - டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல்
HARINI JULY
ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என வேண்டுகோள்கள் - பிரதமர் தெரிவிப்பது என்ன?
sajith 5
பௌத்தமதகுருமாரின் காவியுடையை தொடவேண்டாம் - பொலிஸாரின் நடவடிக்கை ஜனநாயகவிரோத செயல் ; என்கின்றார் சஜித்
Screenshot_20261015_224645_Editor-Lite
பௌத்தமதகுருமார் தற்போது ஜனாதிபதி செயலகத்தின் முன்னாலிருந்து விலகி காலிவீதியின் மறுபக்கத்தில்
Mahinda-1
மகிந்தவிற்கு மருந்துகொடுக்க சிராந்தி தேவை- பெரமுன
MediaFile_20261015_120159_758
ஜனாதிபதி செயலகத்தின் அருகில் தற்காலிக கூடாரத்தை அமைத்து தங்கியியுள்ள பௌத்தமதகுருமார்
Screenshot_20261015_192923_YouTube
பேச்சுவார்த்தை தோல்வி- ஜனாதிபதி செயலகத்திலிருந்து விலகிச்செல்வதற்கு பௌத்த மதகுருமார் மறுப்பு
கால்நடை உற்பத்தியை அதிகரித்து, பாலையும் இறைச்சியையும் பெறுமதிசேர் பொருட்களாக வடக்கிலேயே தயாரிக்க ஒத்துழைப்பு தேவை – ஆளுநர்