பொதுபலசேனாவின் ஞானசார தேரரை விடுதலை செய்யவேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் பீடாதிபதி தன்னை சந்தித்த சிறைச்சாலை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அஸ்கிரிய மல்வத்த பீடாதிபதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போது ஞானசாரர் விவகாரம் குறித்து ஆராயப்பட்டது.
இந்த சந்திப்பின் போது அஸ்கிரிய பீடாதிபதி வராககொட ஸ்ரீ ஞானரத்தின தேரர் ஞானசார தேரரை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
ஞானசாரதேரரை விடுதலை செய்வதற்கான வழிமுறைகள் உள்ளதா என கேள்வி பௌத்தமதகுரு கேள்வி எழுப்பினார் இதற்கு பதிலளித்த சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக பலதென்ன ஞானசார தேரர் விடுதலை குறித்து உறுதியான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டார்.
இதன் பின்னர் சிறைச்சாலைகள் ஆணையாளர் மல்வத்த பீடாதிபதி திப்பெட்டுவாவே ஸ்ரீசுமங்கள தேரரை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது மல்வத்தை பீடாதிபதி பௌத்த மதகுருமாரை தனியாக வேறு ஒரு இடத்தில் தடுத்து வைப்பதற்கான ஏற்பாடுகள் அவசியம் என்றார்.
இது குறித்து முன்னர் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என அவர் தெரிவித்தார்
சிறையில் அடைக்கப்படும் பௌத்தமகுருமாரை கண்ணியத்துடனும் உரிய விதத்திலும் நடத்தவேண்டும் என அவர் தெரிவித்தார்.