ஞானசார தேரரின் விடுதலையை கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே பௌத்த மதகுருமார் ஆரம்பித்த போராட்டம் முடிவிற்கு வந்துள்ளது.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தாங்கள் அமைந்திருந்த தற்காலிக கூடாரங்களை அகற்றியுள்ள பௌத்தமதகுருமார் அங்கிருந்து விலகி செல்ல ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பு கோட்டை நீதவான் உலப்பன சுமங்கள தேரர் உட்பட 54 பேர் ஜனாதிபதி செயலக பகுதியில் நடமாடுவதற்கு தடை விதித்ததை தொடர்ந்தே பௌத்தமதகுருமார் அங்கிருந்து வெளியேறுகின்றனர்.
நேற்று மாலை பௌத்தமதகுருமார் தங்கள் போராட்டத்தினை ஆரம்பித்தனர்.