உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள காவலில் உள்ள தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக நிரந்தர மூன்று நீதிபதிகள் கொண்ட மேல்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
லங்கா ஈ நியுஸ் ஊடகவியலாளா பிரகீத் எக்னலிகொட 2010 ஜனவரி 24ம் திகதி ஜனாதிபதி தேர்தலிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல்போனார். அது தொடர்பானதே இந்த வழக்கு.
உலகின் கவனத்தை ஈர்த்த இலங்கையின் நீண்டகாலமாக தீர்வு காணப்படாத வழக்குகளில் ஒன்று பிரகீத் எக்னலிகொடவினுடையது என்பது குறிப்பிடத்தக்கது.