பொலிஸ் தடுப்புக்காவலில் நபரொருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பொலிஸ் சிறைக் கூடுகளில் கண்காணிப்புக் கேமராக்கள் (CCTV) பொருத்தப்படும் என்ற வாக்குறுதி முதன்முதலில் 2016 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு பொலிஸார் ஒரு புதிய காலக்கெடுவை நிர்ணயித்தனர்: 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒவ்வொரு தடுப்புக் காவலிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்பதே அதுவாகும். ஆனால், கடந்த 7 நாட்களில் மேலும் இருவர் தடுப்புக்காவலில் உயிரிழந்துள்ள நிலையில், பொலிஸாரின் உடல் கேமராக்களுக்கான (Body cameras) ஒப்பந்தப்புள்ளிகள் இன்னமும் மதிப்பீட்டு மட்டத்திலேயே உள்ளன. இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டு தற்போது ஒரு தசாப்த காலம் கடந்துவிட்டது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலம் மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஆகியவற்றுக்கூடாக விரிவான அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கு முன்னர், பொலிஸார் தங்களுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை பொறுப்புக்கூறலுடன் கையாள முடியும் என்பதை முதலில் நிரூபிக்க வேண்டும். அதிகாரம் விரிவுபடுத்தப்படுவதற்கு முன்பாக நம்பிக்கை பெறப்பட வேண்டும்.