இலங்கை தமிழர்களின் நீதிக்கான குரல் செவிசாய்க்கப்படாமல் போய்விடக்கூடாது என கனடாவின் கொன்சவேர்ட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுவ் மஜும்தார் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
இலங்கையின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சிவஞானத்;தினை வரவேற்பதில் எனது சக நாடாளுமன்ற உறுப்பினர் கொஸ்டாஸ் மெனெகாக்கிசுடன் இணைந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.
போர் முடிவடைந்து 17 ஆண்டுகளாகியுள்ள போதிலும் இனப்படுகொலையின் வடுக்கள் இன்னமும் மாறாமல் உள்ளன.
குடும்பங்கள் இன்னமும் காணாமலாக்க்பபட்டவர்களை தேடி வருகின்றன.
காணிகளும் வாழ்வாதாரங்களும் இன்னமும் மீள கையளிக்கப்படவில்லை.
பொறுப்புக்கூறல் என்பது இன்னமும் எட்டப்படாத ஒன்றாகவே காணப்படுகின்றது.
இலங்கைக்கு வெளியே மிகப்பெரிய தமிழ் சமூகங்கள் வாழுமிடமாக கனடா காணப்படுகின்றது, பல கனடியர்களுக்கு இந்த வாழ்வு ஒருதனிப்பட்ட அனுபவமாகும்.
தமிழ்மக்கள் நீதி பொறுப்புக்கூறல் மற்றும் கண்ணியத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட எதிர்காலம் ஆகியவற்றுக்கு தகுதியானவர்கள்
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கனடா வலியுறுத்தவேண்டிய குரல்கொடுக்கவேண்டிய விடயங்கள் இவை, தமிழ்மக்களின் நீதிக்கான குரல்செவிசாய்க்கப்படாமல்போய்வி