ச. சிவயோகநாதன்
தலைவர்
கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம்
!
அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சியில் வடக்கு–கிழக்கு தமிழ் மக்களின் நில உரிமைகள், பாரம்பரிய வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் தொடர்பான விவகாரங்கள் புதியதொரு ஆபத்தான திசையில் நகர்ந்து கொண்டிருக்கின்றன.
வடக்கு–கிழக்கு பிரிப்பு விவகாரம், சுனாமி கட்டமைப்பின் செயலிழப்பு, தொல்லியல் திணைக்களத்தின் தலையீடுகள், மகாவலி அதிகாரசபையின் நில ஆக்கிருமிபுபுக்கள், வன இலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் செயற்பாடுகள் எனப் பல்வேறு விவகாரங்களில் அரசாங்கத்தின் அணுகுமுறைகள் தமிழ் மக்களிடையே ஆழமான சந்தேகங்களையும் அச்சங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று மற்றும் கிரான் பிரதேச செயலகப் பிரிவுகளில் அரச அதிகாரிகளைப் பயன்படுத்தி புதிய பண்ணையாளர்கள் சங்கங்களை உருவாக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக எழுகின்ற குற்றச்சாட்டுகள், மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை விவகாரத்தில் அரசாங்கம் திட்டமிட்ட புதிய நகர்வுகளை மேற்கொள்கிறதா என்ற கேள்வியை எழுப்புகின்றன.
மக்களின் பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே, அரச அதிகாரக் கட்டமைப்புகளைப் பயன்படுத்தி அந்த உரிமைகளைப் பலவீனப்படுத்த முயற்சித்தால், அது ஜனநாயக ஆட்சிக்கான மிகப்பெரிய அவமானமாகும்.
நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் சட்டத்தின் பெயரில் உரிமைகளை மறுக்க முடியாது!
மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை விவகாரத்தில் கால்நடைப் பண்ணையாளர்கள் நீண்டகாலமாக நீதிக்காகப் போராடி வருகின்றனர்.ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் மற்றும் கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்தி மேய்ச்சல் தரையை மீட்டெடுக்க வேண்டிய அரசாங்கம், அதற்குப் பதிலாக புதிய நிர்வாக மற்றும் அரசியல் தலையீடுகளுக்கு இடமளிப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்று கூறும் அரசாங்கம், சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்பதை தனது செயற்பாடுகள் மூலம் நிரூபிக்க வேண்டும்.
அரச அதிகாரிகள், அரசியல் செல்வாக்குடையவர்கள், நில அபகரிப்பில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டப்படும் தரப்பினர் என எவரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல.
கடந்த காலங்களில் மகாவலி திட்டத்திற்கு ஆதரவளித்தவர்களும் பொறுப்பிலிருந்து தப்ப முடியாது!
மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை விவகாரத்தில் கடந்த காலங்களில் மகாவலி திட்டத்தை ஆதரித்து, கால்நடைப் பண்ணையாளர்களைத் தவறான வழியில் வழிநடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்படும் தரப்பினரும் தங்களது கடந்தகால அரசியல் மற்றும் சமூகப் பொறுப்புகளை மறந்துவிட முடியாது.
மக்களின் நிலங்களையும் வாழ்வாதாரங்களையும் பாதிக்கும் அரசியல் முடிவுகளுக்கு ஆதரவளித்தவர்கள், எதிர்காலத்தில் உருவாகக்கூடிய சட்ட, அரசியல் மற்றும் சமூக விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இன்று அதிகாரம் இருப்பதால் அனைத்தையும் சாதித்துவிடலாம் என்று நினைப்பவர்கள், நாளை இதே சட்டத்தின் மூலமோ அல்லது சர்வதேச நீதிப் பொறிமுறைகளினூடாகவோ பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதை மறந்துவிடக்கூடாது.
அநுர அரசாங்கத்திற்கு எமது எச்சரிக்கை!
வடக்கு–கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்கள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அரச திணைக்களங்கள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளைப் பயன்படுத்தி அவர்களின் உரிமைகளைப் பலவீனப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுமானால், அதற்கு எதிராக மக்கள் ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடுவார்கள்.
மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் ஒரு சாதாரண நிலப் பிரச்சினை அல்ல. இது கால்நடைப் பண்ணையாளர்களின் உயிர், வாழ்வாதாரம், பாரம்பரிய உரிமை மற்றும் சமூக நீதியுடன் தொடர்புடைய பிரச்சினையாகும்.
அரசாங்கம் தனது அதிகாரத்தை மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பயன்படுத்த வேண்டும். உரிமைகளைப் பறிப்பதற்காக அல்ல.
சட்டம் தனது கடமையைச் செய்யும் என்றால், அது இன ரீதியிலான வேறுபாடுடனோ அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவாகவோ இருக்க முடியாது.
அநுர அரசாங்கத்தின் ஆட்சியில் இன்னும் எத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படப் போகின்றன என்பதை தமிழ் மக்கள் விழிப்புடன் அவதானித்து வருகின்றனர்.
எதிநீதிமன்றங்களையும் அரச திணைக்களங்களையும் பயன்படுத்தி தமிழ் மக்களின் நில உரிமைகளைப் பறிக்க அநுர அரசாங்கம் முயற்சிக்கிறதா?
மயிலத்தமடு–மாதவனை விவகாரம் எதிர்காலத்தில் பாரிய அரசியல் மற்றும் சட்டப் பொறுப்புகளை உருவாக்கும்!

எதிர்காலத்தில் உருவாகும் விளைவுகளுக்கு அரசாங்கமும், அதற்கு ஆதரவளித்தவர்களும் தங்களது பொறுப்பிலிருந்து தப்ப முடியாது.
நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்து!
மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரையைப் பாதுகாத்திடு!
கால்நடைப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே!
தமிழ் மக்களின் பாரம்பரிய நில உரிமைகளை உறுதிப்படுத்து!
ச. சிவயோகநாதன்
தலைவர்
கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம்ர்காலத்தில் உருவாகும் விளைவுகளுக்கு அரசாங்கமும், அதற்கு ஆதரவளித்தவர்களும் தங்களது பொறுப்பிலிருந்து தப்ப முடியாது.