கொழும்பு:அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பொதுமக்கள் எதிர்பார்த்த நிவாரணங்களை வழங்கத் தவறிவிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா (Dr. Harsha de Silva) குற்றம் சாட்டியுள்ளார்.
ஹர்ஷ டி சில்வா முன்வைத்த முக்கிய குற்றச்சாட்டுகள்:
-
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை: அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான வரிகளை நீக்குவது மற்றும் பெறுமதி சேர் வரியை (VAT) பூஜ்ஜியமாகக் குறைப்பது உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறிவிட்டது.
நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்தப் பற்றாக்குறை: 2019 ஆம் ஆண்டில் சராசரி நடுத்தரக் குடும்பம் ஒன்றின் மாதாந்த வருமானத்திற்கும் செலவிற்கும் இடையில் 5,700 ரூபா மிகை (Surplus) காணப்பட்டது. ஆனால் இன்று நிலைமை முற்றிலும் மாறி, சராசரி நடுத்தரக் குடும்பம் ஒன்றின் மாதாந்தச் செலவு அதன் வருமானத்தை விட 18,170 ரூபா அதிகமாக (Deficit) உள்ளது.
கடன் மற்றும் நகை அடகு: மாதம் ஒன்றிற்குச் சுமார் 18,000 ரூபா பற்றாக்குறை ஏற்படுவதால், அதனை ஈடுகட்ட மக்கள் கடன் வாங்கவோ, செலவுகளைக் குறைக்கவோ அல்லது தமது பெறுமதிமிக்க பொருட்களை அடகு வைக்கவோ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.