world bank
உலக வங்கி
தெற்காசியாவில் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஒரு வேலை என்பது வறுமையிலிருந்து விடுபட்டு நோக்கமுள்ள கண்ணியமான மற்றும் சுயமரியாதையான வாழ்க்கைக்கு ஒரு பாதை என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். ஆனால் தங்கள் பொருளாதாரங்கள் தங்களுக்காகப் போதுமான வேலைகளை உருவாக்கத் தவறிவிட்டதையும் அவர்கள் காண்கிறார்கள்.
சமீபத்தில் அவர்கள் தங்கள் பொறுமையின்மையை உலகுக்குக் காட்டினர்.
செப்டம்பர் 2025 இல் வளர்ச்சியை மற்றும் வேலைவாய்ப்பை நசுக்கிய ஊழலைக் கண்டித்து எதிர்ப்புத் தெரிவித்த நேபாளத்தின் ‘Gen Z youth) இளைஞர்கள் அரசாங்கத்தைக் கவிழ்த்தனர்.
ஆகஸ்ட் 2024 இல் ஊழல் மற்றும் பாகுபாடு காட்டும் வேலை ஒதுக்கீடுகளை எதிர்த்துப் போராடிய பங்களாதேஷ் மாணவர்கள் பிரதமரைநாட்டை விட்டு தப்பியோடச் செய்தனர்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தவறாக நிர்வகிக்கப்பட்ட பொருளாதாரத்திற்கு எதிராக இலங்கையில் நடந்த பெரும் போராட்டங்கள் ஜனாதிபதியை நாட்டைவிட்டு வெளியேறச் செய்தன.
நேபாளம் பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் இப்போது தங்களைக் கதிரையில் அமர்த்திய இளைஞர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யப் போராடி வருகின்றன. இந்த நடவடிக்கையின் மையத்தில் வேலைவாய்ப்புகள் இருக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள மற்ற அரசாங்கங்களும் இதைக் கவனத்தில் கொண்டுள்ளன.

👥 வேலைவாய்ப்புக்கான சவால்கள்
தெற்காசியாவின் இளைஞர்களின் (15-24 வயதுடையோர்) எண்ணிக்கை 2035 ஆம் ஆண்டளவில் 300 மில்லியனை நெருங்கும்.
சுமார் பாதிப் பேர் பள்ளியில் இருப்பார்கள் மேலும் கால் பகுதிப் பேர் வேலை தேடுவார்கள்.
ஆனால் வழக்கமான செயல்பாடுகளுடன்இ எஞ்சியிருக்கும் கால் பகுதிப் பேர்—அதாவது 70 மில்லியனுக்கும் அதிகமானோர்—பள்ளியை விட்டு வெளியேறியும் வேலையில்லாமலும் இருப்பார்கள்.
சமூக நெறிகள் பாதுகாப்பு குறித்த கவலைகள் மற்றும் வீட்டு வேலைகள் பிள்ளைப் பராமரிப்புப் பொறுப்புகள் ஆகியவை இளம் பெண்களின் வாய்ப்புகளை மேலும் கட்டுப்படுத்துவதால் அவர்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
🚀 வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான வழிமுறைகள்
தெற்காசியாவில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்த ஒரே நேரத்தில் பல விஷயங்கள் சரியாக நடக்க வேண்டும். நாடுகள் வலுவான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை பராமரிக்க வேண்டும்இ தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்த வேண்டும் மற்றும் தொழிலாளர் சந்தைகளை சிறந்த முறையில் செயல்பட வைக்க வேண்டும்.
👩🔧 தொழிலாளர் சந்தையின் வழங்கல் பக்கம்
நாடுகள் பின்வருவனவற்றில் கவனம் செலுத்த வேண்டும்:
35 வயதுக்குட்பட்ட தொழிலாளர்கள் (அனைத்து தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர்).
பெண்கள் (தெற்காசியாவில் மூன்றில் ஒரு பெண் மட்டுமே வேலை செய்கிறார் இது மற்ற பிராந்தியங்களில் பாதி விகிதமாகும்).
இதற்கு உதவும் நடவடிக்கைகள்:
கல்வி மற்றும் நிதி வசதிக்கான இடைவெளிகளை மூடுதல்.
மலிவு விலையில் குழந்தை மற்றும் முதியோர் பராமரிப்பை வழங்குதல்.
பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் பணியிடங்களை உறுதிப்படுத்துதல்.
வேலையிலும் வீட்டிலும் பாலினப் பாகுபாட்டைக் குறைத்தல்.
🏭 வேலைவாய்ப்பின் தேவைப் பக்கம்
நுண் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின்) திறனை வெளிக்கொணர்வது மிகப்பெரிய பலன்களை அளிக்கும்.
இதற்கு அடித்தளமாக அமைய வேண்டியவை:
பேரியல் பொருளாதாரத்தின் நிலைத்தன்மை.
ஒழுங்குமுறைகளின் முன்கணிப்புத் திறன் .
நிறுவனங்களின் செயல்திறன்
சரியான பௌதீக மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு.

இவற்றைத் தவிர வேலைவாய்ப்பை அதிகம் உருவாக்கக்கூடிய வளர்ச்சிப் பிரிவுகளில் (எ.கா. விவசாய வணிகம் உள்கட்டமைப்பு உற்பத்திஇ சுகாதாரம் மற்றும் சுற்றுலா) தனியார் நிறுவனங்களை ஆதரிக்கவும் பொருளாதாரச் சிதைவுகளைச் (சமாளிக்கவும் இலக்கு வைக்கப்பட்ட தலையீடுகளைச் செய்யலாம்.
எங்கள் 2024 தெற்காசியா மேம்பாட்டு அறிக்கை ‘மீள்தன்மைக்கான வேலைகள்’ ) இல் விவரிக்கப்பட்டுள்ளபடி: வரி மற்றும் தொழிலாளர் விதிமுறைகளை எளிதாக்குவதும் மற்றும் பெரிய பெரும்பாலும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்குச் சாதகமான சிதைக்கும் கொள்கைகளை நீக்குவதும் உதவியாக இருக்கும்.
சக்தி மற்றும் போக்குவரத்துஅமைப்புகளில் முதலீடுகளை மேற்கொள்வது நீண்டகாலமாக இருக்கும் தடைகளைக் குறைக்கும்
🔸உலகளாவிய சவால்கள் ) இருந்தபோதிலும் தெற்காசியா உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் முழுமையாகப் பங்கேற்பதன் மூலம் பயனடையலாம். இது அந்நிய நேரடி முதலீட்டை சந்தை அளவை போட்டியிடும் திறனை நிறுவனத்தின் ஆற்றலை மற்றும் அதன் மூலம் உற்பத்தித்திறனை அதிகரிக்கும். இதனால் உலகச் சந்தைகளில் அதிக விலையைப் பெறக்கூடிய உயர்தரமான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான தெற்காசியாவின் திறன் விரிவடையும்.
🤝 உலக வங்கியின் பங்களிப்பு
உலக வங்கி குழுமம் உதவ முடியும். உதாரணமாக:
பங்களாதேஷ்
பங்களாதேஷில் உள்ள $300 million RAISE திட்டம் ஆரம்பக் கல்வியை முடிக்காத 900000 இளைஞர்களுக்கு ஆலோசனை (வேலையில் பயிற்சி வாழ்க்கை திறன் பயிற்சி மற்றும் நிதி அணுகல் போன்ற சேவைகள் மூலம் வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை மேம்படுத்துகிறது.

ஒரு RAISEபயனாளியின் கதை:
சுமா இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டார். குழந்தைப் பிறந்த சிறிது நேரத்திலேயே கணவன் மனைவி இருவரும் விவாகரத்து பெற்றனர். விவாகரத்து பெற்றவரின் களங்கத்தை சுமந்துகொண்டு வேறுவழியின்றி சுமா தன் பெற்றோரிடம் திரும்பினார் தான் இப்போது அவர்களுக்கு ஒரு சுமை என்று அவர் அறிவார்.
அவர் சக்தி அற்றவராக உணர்ந்தார். அவரது கல்வி மென்திறன்கள் மற்றும் தொடர்புகள் குறைவாக இருந்தன. அவர் பாலினப் பாகுபாடு குழந்தைப் பராமரிப்புப் பொறுப்புகள் மற்றும் பாதுகாப்பு அச்சங்களையும் எதிர்கொண்டார்.
RAISE சுமாவுக்கு கிராஃபிக் டிசைனில் பயிற்சிப் பட்டறையைமுடிக்க உதவியது. பின்னர் அவர் பயிற்சி அளித்த நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டு இன்று அவரே ஒரு பயிற்சியாளராக இருக்கிறார். புறக்கணிக்கப்பட்டவராகவும் சுமையாகவும் இருந்த நிலை மாறி சுமா இப்போது மற்றவர்களுக்கு தங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைப்பது என்பதற்கான ஒரு முன்மாதிரியாக நிற்கிறார்.
இலங்கை
இலங்கையில் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து போட்டித்தன்மையை ) அதிகரிக்கவும் மற்றும் தனியார் துறை தலைமையிலான மீட்சிக்கும் வேலை உருவாக்கத்திற்கும் அடித்தளம் அமைக்கவும் உலக வங்கி பொருளாதாரச் சீர்திருத்தங்களை ஆதரித்தது.
