ஜனவரி 17, 2026
RD Media Earning Hub (Pvt) Ltd எனும் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் அனுமதியற்ற வைப்பு சேகரிப்பு நடவடிக்கைகள் குறித்து இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 42ஆம் பிரிவின் கீழ் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, குறித்த நிறுவனமும் அதன் பணிப்பாளர்களும் சட்ட விதிகளுக்கு முரணாக வைப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ளதாக மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இதன்படி, “பிணை வைப்புக்கள்” (Security Deposits), “முதலீட்டு ஒப்பந்தங்கள்” (Investment Agreements) அல்லது வேறு ஏதேனும் முறைகள் ஊடாக பொதுமக்களிடமிருந்து வைப்புக்களை ஏற்றுக்கொள்வதை உடனடியாக நிறுத்துமாறு RD Media Earning Hub நிறுவனத்திற்கு மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது. அத்துடன், பொதுமக்களுக்குச் செலுத்த வேண்டியுள்ள எஞ்சியிருக்கும் அனைத்து வைப்புப் பொறுப்புக்களையும் உடனடியாக மீளச் செலுத்துமாறும் அந்நிறுவனம் பணிக்கப்பட்டுள்ளது.
