2022 பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டுவருகின்ற போதிலும் இலங்கையின் முதலீட்டு சூழல் தொடர்ந்தும் பல குறி;ப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கின்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சர்வதேச முதலீட்டு சூழல் குறித்த அறிக்கையில் இலங்கையின் நிலவரம் பற்றி மேலும் தெரிவித்துள்ளதாவது
இலங்கை சந்தையின் வெளிப்படைத்தன்டை குறித்து வெளியாகும் முரண்பாடன தகவல்கள் குறித்து முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் உள்ளனர்.
2025;ம் ஆண்டில் இலங்கைக்கு கிடைத்த மொத்த வெளிநாட்டு நேரடி முதலீடு 1.06 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. எனினும் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு வீதத்திற்கு சமமானது, அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் பொதுவாக பதிவாகும் அளவை விட இது கணிசமாக குறைவானது.
இலங்கை அதன் வெளிநாட்டு முதலீட்டு இலக்குகளை அடையவேண்டுமாயின் கொள்கை ஸ்திரதன்மை, தொழிலாளர்கள் ஒழுங்காக தொடர்ச்சியாக கிடைக்கின்ற சூழல்,உட்பட பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டும்.
வெளிநாட்டு முதலீடுகளை ஒழுங்குபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும்,ஒழுங்குபடுத்தலில் உள்ள நிச்சயமற்ற தன்மை,அதிகாரதடைகள் , தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிப்படை தன்மை போன்றவை வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டிற்கு தடையாக உள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
