அனுரகுமாரவின் மனைவி என்றால் பொலிஸார் இப்படி செயற்பட்டிருப்பார்களா? நீதிமன்றத்தில் சிராந்தி சட்டத்தரணி

சிராந்தி ராஜபக்சவின் அடையாளம் காரணமாகவே அவர் வேறுபட்ட முறையில் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டிய சிராந்தி ராஜபக்சவின் சட்டத்தரணி அனில்சில்வா பொலிஸாரின் நடத்தை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் சிராந்தி ராஜபக்சவின் முன்பிணை மனுமீதான விசாரணையின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது
துரதிஸ்டவசமாக இங்குள்ள ஒரே பிரச்சினை என்னவென்றால் இவர் சிராந்தி ராஜபக்ச என்பதுதான்,இவர் திருமதி அனுரகுமார திசநாயக்கவாகயிருந்தால் பொலிஸார் இந்த முட்டாள்தனமான காரியத்தை செய்திருப்பார்களா? செய்திருக்க மாட்டார்கள்.
இச்சம்பவம் தொடர்பான பல்வேறு வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன,இந்த நீதிமன்றத்தில் ஒரு வழக்கு கொழும்பு நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு.
இச்சம்பவத்திற்காக முறைப்பாட்டு தரப்பு வெவ்வேறு நீதிமன்றங்களில் வழக்குகளை தாக்கல் செய்கின்றது, ஒரு நீதிமன்றம் பிணை வழங்கும்போது மற்றுமொரு நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்கின்றது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இந்த நீதிமன்றத்தில் இருக்கும்போது இந்த நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு இல்லை என எப்படி அவர்கள் தெரிவிக்க முடியும்,இந்தசம்பவம் தொடர்பான வங்கி கணக்கு இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரிலேயே முடக்கப்பட்டது,எனவே பிணை மனுவை விசாரிக்க இந்த நீதிமன்றத்திற்கு அவர்களால் எப்படி தெரிவிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

police11
வினோத உடைப் போட்டியில்செம்மணியில் புதையுண்ட சிறுவனாக தோன்றிய மாணவன் - பெற்றோர் பொலிஸ் விசாரணைக்காக அழைப்பு
sajith 5
பௌத்தமதகுருவின் காவியுடையை சாதாரண மக்கள் களைவதற்கு உரிமையில்லை - இது கண்டிக்கப்படவேண்டிய விடயம் - சஜித்
imf4
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி – சர்வதேச நாணயநிதியத்தின் எதிர்வுகூறல் என்ன?
psta no1
இன்று மதியம் 1.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக – அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை கிழித்தெறி
shiranthi are
சிராந்திக்கு இதயசத்திரசிகிச்சையா? உடனடியாக உறுதிப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு
anura may 26
சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்திலிருந்து விலகுவதா அல்லது புதிய திட்டத்தில் இணைவதா? அனுர தெரிவித்திருப்பது என்ன?
gnasaraa
ஞானசார தேரர் கடும் மன உளைச்சலில்- நஞ்சருந்தி உயிர்துறக்கப்போவதாக தெரிவித்தார்- பௌத்தமதகுரு
Malwathu Mahanayake Pushes Back on SJB Claims 1-858629
மக்கள் ஆதரவை இழந்துவரும் அரசாங்கம் பௌத்தர்களின் நலன்களை விட்டுக்கொடுத்து சிறுபான்மையினத்தவர்களை திருப்திப்படுத்தமுயல்கின்றது – பௌத்தபீடாதிபதியிடம் ஐக்கிய மக்கள் சக்தி
Chamara_Sampath_1200x675px_06_08_25
சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?
batti land
மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்