பாக்கிஸ்தானில் பாடசாலை கூரை இடிந்து விழுந்ததில் 27 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி

பாக்கிஸ்தானின் பெசாவர் நகரில் தனியார் பாடசாலையொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் 27 மாணவர்களும் ஒரு ஆசிரியையும் பலியான துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் லேடி ரீடிங் மருத்துவமனைக்கு கொண்டுவந்துள்ளனர் என மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கூரை இடிந்த விழுந்தமைக்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை.

Residents gather during a search operation after a roof collapsed at a school in Peshawar

பல மாணவர்கள் இன்னமும் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளனர் என அவசரசேவை பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டிடத்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள பொலிஸார் கட்டிடம் பலவீனமான நிலையிலேயே இருந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
பாடசாலை கட்டிடத்தின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பாக்கிஸ்தானில் கட்டிட கட்டுமான தரநிலைகள் பெரும்பாலும் சரியான விதத்தில் அமுல்படுத்தப்படுவதில்லை என குற்றச்சாட்டுகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
கட்டுமான செலவுகளை குறைப்பதற்காக தரமற்ற பொருட்களை பயன்படுத்தி கட்டிடங்களை கட்டுவதுடன் பாதுகாப்பு விதிமுறைகளும் புறக்கணிக்கப்படுகின்றன.
கடந்த மாதம் லாகூரில் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் நான்கு மாணவர்கள் உயிரிழந்தனர்.

Parents and residents gather near an ambulance after a school roof collapse in Peshawar, Pakistan

இன்றைய சம்பவத்தில் கொல்லப்பட்ட மாணவர்கள் 13 வயதிற்கு குறைந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனை வட்டாரங்கள் இதனை உறுதி செய்துள்ளதுடன் மருத்துவமனையில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.
இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுவதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது.
பெரும்துயருடன் பிள்ளைகளை தேடும் பெற்றோர்.
துயரத்தில் சிக்குண்டுள்ள பெற்றோர் பாடசாலைக்கு வெளியேயும் மருத்துவமனையிலும் தகவல்களை பெறுவதற்காக காத்திருக்கின்றனர்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Screenshot_20261015_224645_Editor-Lite
பௌத்தமதகுருமார் தற்போது ஜனாதிபதி செயலகத்தின் முன்னாலிருந்து விலகி காலிவீதியின் மறுபக்கத்தில்
Mahinda-1
மகிந்தவிற்கு மருந்துகொடுக்க சிராந்தி தேவை- பெரமுன
MediaFile_20261015_120159_758
ஜனாதிபதி செயலகத்தின் அருகில் தற்காலிக கூடாரத்தை அமைத்து தங்கியியுள்ள பௌத்தமதகுருமார்
Screenshot_20261015_192923_YouTube
பேச்சுவார்த்தை தோல்வி- ஜனாதிபதி செயலகத்திலிருந்து விலகிச்செல்வதற்கு பௌத்த மதகுருமார் மறுப்பு
கால்நடை உற்பத்தியை அதிகரித்து, பாலையும் இறைச்சியையும் பெறுமதிசேர் பொருட்களாக வடக்கிலேயே தயாரிக்க ஒத்துழைப்பு தேவை – ஆளுநர்
un human right off
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தில் படையினருக்கு வழங்கப்பட்டுள்ள பரந்துபட்ட அதிகாரங்களை நீக்கவேண்டும் - சட்டமூலத்தில் கணிசமான மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் - ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம்
missing protest
வடக்கு கிழக்குமுழுவதும் இராணுவமயமாக்கல் ஆழமாக வேரூன்றியுள்ளது- போர் முடிந்து 17 வருடங்கள் இன்னமும் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன - இலங்கை மனித உரிமை ஆணைக்குழு
Sonali Jain-Chandra IMF-858917
இலங்கைக்கு அடுத்தது என்ன? தனது ஆதரவு எந்த வடிவத்திலும் தொடரும் என்கின்றது சர்வதேச நாணயநிதியம்
rajeev1111
மரண தண்டனை இரத்து நம்பிக்கையளிக்கின்றது -அனோஜன் விடுதலையாகி பாதுகாப்பாக குடும்பத்தினருடன் இணையும் தருணத்தையே உண்மையான வெற்றியாக கருத முடியும்- ராஜ்குமார் ரஜீவ்காந்
Dayan-Jayatilleka
மாகாணசபைதேர்தல்கள் குறித்து அரசாங்கத்திற்கு அக்கறையில்லை – அரசாங்கம் தேர்தலை நடத்தாது- தயான் ஜயதிலக