16- 10- 2026 இன்று கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் அலுவலகத்தில்.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், பிரஜா அபிலாஜ வலையமைப்பு மற்றும் கிராமிய உழைப்பாளர் சங்கம் இணைந்து உலக உணவு தினத்தை முன்னிட்டு.
“உணவு இறையாண்மையை பேணுவோம்
உணவு பாதுகாப்பை உறுதி செய்வோம்” என்ற தொனிப் பொருளில் உணவுதினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு பாரம்பரிய உணவு வகைகள் சமைத்து வழங்கப்பட்டது.



வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கு பயிர் கண்டுகள், விதைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரும்பிராய் வடக்கின் கிராம அலுவலர், சமுர்த்தி உத்தியோகத்தர், சுகாதார குடும்ப நல உத்தியோகத்தர். மற்றும் சிறப்பு விருந்தினர்கள் எமது அங்கத்தவர் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.