அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் அடிப்படை மனித உரிமைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் – சுதந்திர ஊடக இயக்கம் நீதிமன்றில் மனு

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராக சுதந்திர ஊடக இயக்கத்தின் இரண்;டு செயற்பாட்டாளர்கள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தின் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மையை கேள்விக்குட்படுத்தி இவர்கள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள இந்த சட்டமூலம் அடிப்படை உரிமைகளுக்கு அச்சுறுத்தலை விளைவிக்கும் அத்தியாவசியமற்ற மற்றும் பரந்துபட்ட கட்டுப்பாடுகளை கொண்டிருப்பதாகவும் இலங்கையின் ஊடகசுதந்திரத்தினை இது கடுமையாக பாதிக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர ஊடக இயக்கத்தின் உறுப்பினர்களான உதய களுபத்திரன,ஹனா இப்ராஹிம் ஆகியோரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
பயங்கரவாதம் என்பதை வரையறுக்கும் சட்டமூலத்தின் மூன்றாவது பிரிவு குறித்தே முக்கியமாக சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர்கள் 3(2) பிரிவின் கீழ் உள்கட்டமைப்புகளுக்கு கடுiமையான சேதத்தை இழைத்தல்,குறிப்பிடத்தக்க பொருளாதார இழப்பை ஏற்படுத்துதல்,மின்னனு அமைப்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்துதல் போன்ற பொதுமக்களின் சாதாரண நடவடிக்கைகள் கூட பயங்கரவாத நடவடிக்கைகளாக கருதப்படலாம் என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
அமைதியான போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களுக்கான உரிமைகளை பாதுகாக்கும் ஒரு சரத்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் மொழியின் தெளிவின்மை காரணமாக இந்த சட்டம் சட்ட அமுலாக்கல் அமைப்புகளால் தன்னிச்சையாக பயன்படுத்தப்படும் ஆபத்துள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

852275102_2685767395218742_1416180106624183216_n
உணவு இறையாண்மையை பேணுவோம் உணவு பாதுகாப்பை உறுதி செய்வோம்
MediaFile_20261016_071805_801
பௌத்தசாசன அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வி- விகாரமகாதேவி பூங்காவில் பௌத்தமதகுருமார் போராட்டம்
lalkantha1
மக்கள் வழங்கிய ஆணையை மீறி அரசாங்கம் ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு வழங்காது- லால்காந்த
Prison-officials-Mahanayaka-Theras
ஞானசாரரை விடுதலை செய்யவேண்டும் - சிறைச்சாலை அதிகாரிகளிடம் அஸ்கிரிய பீடாதிபதி
Shiranthi Rajapska 11-858044
சிராந்திக்கு பிணை
shira11
சிராந்திக்கு பைபாஸ் சத்திரசிகிச்சை அவசியம் - மருத்துவ அறிக்கை
Suresh-Sallay
பிரகீத் காணாமலாக்கப்பட்ட வழக்கு – சுரெஸ் சாலே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
MediaFile_20261016_071805_801
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பௌத்தமதகுருமார் ஆரம்பித்த போராட்டம் முடிவிற்குவந்தது
laxman k
நான் சிறுபான்மையினத்தவர்களை விமர்சிக்கவில்லை- லக்ஸ்மன் கிரியல்ல
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரான் கப்பல்கள் - இந்தியாவின் உதவியை நாடியதா ஈரான்?