டப்ளின் விமான நிலையத்தில் குமார் சங்கக்கார குடும்பத்தினருக்கு பாகுபாடு? ரைனயர் ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற முன்னாள் வீரரான குமார் சங்கக்கார, டப்ளின் விமான நிலையத்தில் வைத்து தனது குடும்பத்தினரிடம் ரைனயர் (Ryanair) விமான நிறுவன ஊழியர்கள் பாகுபாட்டுடனும் அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து எக்ஸ்  தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “டப்ளின் விமான நிலையத்தில் ரைனயர் நிறுவனத்தின் கேட் (Gate) ஊழியர்களிடம் யாராவது பாகுபாட்டை அனுபவித்திருக்கிறீர்களா? நானும் எனது குடும்பத்தினரும் இப்போது அதை அனுபவித்தோம். அது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. அவர்களின் பேச்சுத் தொனி, நடைமுறைகளைக் கையாண்ட விதம் மற்றும் அச்சுறுத்தும் நடத்தைகள் எந்தவொரு பயணியாலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. டப்ளினில் எனக்குக் கிடைத்த முதல் மோசமான அனுபவம் இதுவாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

49 வயதான முன்னாள் சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரமும் தற்போதைய வர்ணனையாளருமான சங்கக்கார, இந்த அனுபவம் மிகவும் மனவேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்திற்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ள பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் பியர்ஸ் மோர்கன் (Piers Morgan), “சங்கக்காரவை விட மிகவும் கண்ணியமான மற்றும் பண்பான ஒருவரை நான் கண்டதில்லை. அவர் இவ்வாறு கூறுகிறார் என்றால், அது நிச்சயமாக மிகவும் வெட்கக்கேடான நடத்தையாகத்தான் இருந்திருக்க வேண்டும். ரைனயர் நிறுவனம் இதனை உடனடியாகவும் முறையாகவும் விசாரிக்க வேண்டும் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சீவ வீரவர்ண என்பவரும் இந்தப்பதிவில் கருத்துத் தெரிவிக்கையில், மேலைநாடுகளில் தானும் இவ்வாறான பாகுபாடுகளை எதிர்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த சங்கக்கார, “இவ்வாறான சம்பவங்களை எதிர்கொள்ளும்போது அது மிகவும் வேதனையளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.

ரைனயர் விமான நிறுவனத்தின் விளக்கம்:

இச்சம்பவம் குறித்து ரைனயர் விமான நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “கட்டாய குடிவரவுச் சோதனைகளை மேற்கொண்ட வாயில் முகவர் (Gate Agent) தேவையான விசா ஆவணங்களைக் கோரியபோது, இப்பயணி அவற்றை வழங்க மறுத்தார். எனினும், இச்சோதனைகள் நிறைவடைந்த பின்னரும், பயணிக்கத் தகுதிபெற்றவர் என்பது உறுதிசெய்யப்பட்ட பின்னரும், அவர் டப்ளினில் இருந்து பிரிஸ்டல் நோக்கிச் சென்ற குறித்த விமானத்தில் பயணித்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

874399966_18606338194066090_8535340139594857650_n
போர்முடிவடைந்து 17 வருடங்கள் - இனப்படுகொலையின் வடுக்கள் இன்னமும் ஆறவில்லை என கனடா நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு
psta no12
எமது சுதந்திரத்தைப் பறிக்கும் சட்டங்கள் வேண்டாம்! | மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஒன்றிணைந்த சிவில் சமூக அமைப்புகள்
869224246_1432566875728132_2769230935562177606_n
இலங்கையில் தமிழர் பகுதிகளில் தனியார் காணிகளில் சட்டவிரோத விகாரைகள் - லண்டனில் இலங்கை தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
mylity 11
36 ஆண்டுகளாகத் தொடரும் நில இழப்பு - 28 ஆவது வாரமாகவும் தொடரும் மயிலிட்டி மக்களின் போராட்டம்!
karu11
பொலிஸார் தங்களுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை பொறுப்புக்கூறலுடன் கையாள முடியும் என்பதை முதலில் நிரூபிக்க வேண்டும்-கருஜெயசூரிய
psta no 11
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டால் மேலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறலாம் - மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம்
Homagama-monk-300x211
பத்தாயிரம் இருபதினாயிரம் ரூபாய்க்கு ஒரு போத்தல் சாரயம் - ஹோமாகம இளைஞனின் இறுதிசடங்கில் பௌத்தமதகுரு பொலிஸார் மீது கடும் குற்றச்சாட்டு
wijiya son
முடக்கப்பட்ட சொத்துக்களும் சட்டவிரோதக் கூட்டணிகளும்: சரிவடையும் ரகித ராஜபக்ஷவின் உலகம்
harsha kumara
ஹோமாகம சந்தேகநபர் : சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட புதிய தகவல்
death in police custody
ஹோமாகம பொலிஸ் காவலில் உயிரிழந்த சம்பவம்: மூன்று விலா எலும்புகள் முறிவு, மூளையில் இரத்தப்போக்கு