அல்லைப்பிட்டியில் 17 வயது சிறுவன் கொல்லப்பட்டு ஒன்பது மாதங்கள்-சந்தேகநபர்கள் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை- பொறுப்புக்கூறவேண்டிய பதவிகளில் இருப்பவர்கள் மௌனம்

Thisa Thiruchelvam
இச் சமூகத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக பொறுப்புக் கூற வேண்டியவர்களாக இருந்து கொண்டு “உங்களுடைய முற்கற்பிதத்தின்” அடிப்படையில் அக் குடும்பத்தையும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியையும் நீங்கள் நிராகரிக்க முடியாது.

இந்த வருடம் மாசி மாதம் ( 10.02.2026) யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டிப் பகுதியில் வைத்து பொலிசாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட 17 வயதுச் சிறுவனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஒன்பது மாதங்களாகியும் இன்னமும் கைது செய்யப்படவில்லை.
பதினேழு வயது சிறுவனை பொலிசார் சுட்டுக் கொண்டிருக்கின்றார். அச்சிறுவன் தொடர்பாக முக்கியமாகப் பொறுப்புக் கூற வேண்டிய சங்கானை பிரதேச பிரிவைச் சேர்ந்த சிறுவர் உரிமை மற்றும் சிறுவர் பாதுகாப்பு அரச அதிகாரிகள் ஒன்பது மாதங்களாகியும் எதுவும் தெரியாதது போல் மெளனமாக இருக்கின்றார்கள்.
உங்களுக்கு தனிப்பட்ட கருத்துக்கள், விமர்சனங்கள் இருக்கலாம் ஆனால் அச்சிறுவனின் கொலைக்கு பொறுப்புக் கூற வேண்டிய பதவிகளில் இருந்து கொண்டு அமைதியாக இருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்களுக்கு இவ்விடயம் தொடர்பாக தனிப்பட்ட ரீதியிலான தெரிவுகள் இருக்கலாம் ஆனால் அரச பதவிகளில் இருந்து கொண்டு அவற்றைச் செய்ய முடியாது.
இச் சமூகத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக பொறுப்புக் கூற வேண்டியவர்களாக இருந்து கொண்டு “உங்களுடைய முற்கற்பிதத்தின்” அடிப்படையில் அக் குடும்பத்தையும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியையும் நீங்கள் நிராகரிக்க முடியாது.
இவ்வாறான பொலிஸ் கொலைகளில் உங்களுக்குத் தலையீடு செய்ய முடியாவிட்டால் பதவிகளில் இருந்து விலகியிருங்கள்.
இவ்விடயத்தில் கரிசனையோடு சிறுவனுக்கு கிடைக்க வேண்டிய நீதியை நிலைநாட்ட நேர்மையாக செயற்படுபவர்கள் அதற்குரிய பொறுப்புக்களை எடுத்துக் கொள்ளட்டும் நீங்கள் விலகியிருங்கள்.
“கடமைக்கும் கண்துடைப்புக்கும் அரச உத்தியோகத்தர்களாக இருப்பதில் அர்த்தம் இல்லை, ஆகக் குறைந்தபட்ச அறத்தோடு உங்களுடைய கடமைகளைச் செய்யுங்கள்.”
சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்
சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்
பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்
மாவட்ட/பிரதேச உளவியல் சமூக உத்தியோகத்தர்.
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

sofia
காஸா தாக்குதலில் கூகுளின் கூட்டுப்பங்கு? மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு வேலையைத் துறந்த பெண்பொறியியலாளர்
gajendran
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை அகற்ற பொலிஸ் உத்தரவு: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடும் கண்டனம்!
IPKF1
கடைகள் தீப்பற்றி எரிந்தன வீதிகளில் மருத்துவமனைகளில் -உடல்கள் - 1987 இல் சாவகச்சேரி சந்தை மீது இந்திய அமைதிப்படையினரின் தாக்குதல் - வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் பதிவுகள்
GSP-EU
முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலங்களால் ஜிஎஸ்பி வரிச்சலுகைக்கு ஆபத்து - இலங்கை வர்த்தக சம்மேளனம்
Galle-Face-Green
ஷாங்கிரி-லா நில ஒப்பந்த விவகாரம்: 13.7 பில்லியன் ஒப்பந்தம் வெறும் 3 நாட்களில் முடிக்கப்பட்டது எப்படி?
880882249_3599136446929888_1124040596592553945_n
பொலிஸ் சித்திரவதை, படுகொலைகளை நிறுத்து!
sarath weera
சிசிடிவி காட்சி கசிவு விவகாரம்: கிங்ஸ்பரி ஹோட்டலுக்கு எதிராக 100 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி சரத் வீரசேகர சட்டத்தரணி மூலம் அறிவித்தல்
568923f6-7c2f-478f-81b2-169ec5b17479
லண்டனில் மொடலிங்கில் ஆர்வமுள்ள பெண்ணை இலக்குவைத்து பாலியல்வன்முறை – தமிழ் புகைப்பட கலைஞருக்கு 11 ஆண்டுகள் சிறை
BIMAL1
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நவம்பர் 3ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது - அரசாங்கம்
c46f3f94-d3a8-427c-bb54-f2b7da82ce1a
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை உடனடியாக விலக்கிகொள்ளவேண்டும் - சர்வதேச மன்னிப்புச்சபை