சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நவம்பர் 3ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது – அரசாங்கம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை நவம்பர் 3ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என சபைத் தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரத்நாயக்கவின் கூற்றுப்படி, பாராளுமன்ற நிலைக் கட்டளைகளுக்கு ஏற்ப நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் திருத்தி, அக்டோபர் 28 கெடுவுக்கு முன்னர் மீளச் சமர்ப்பிக்க எதிர்க்கட்சி தவறியமையைத் தொடர்ந்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றப் பணிகள் பற்றிய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்னர் நவம்பர் 3ஆம் திகதி விவாதத்திற்கு விடப்படுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

இருப்பினும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திருத்தப்பட்ட பிரேரணை சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால், திட்டமிட்டவாறு விவாதம் முன்னெடுக்கப்படாது என அமைச்சர் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான முன்னர் திட்டமிடப்பட்ட விவாதத்திற்குப் பதிலாக, நவம்பர் 3ஆம் திகதி ஒத்திவைப்பு விவாதம் ஒன்று இடம்பெறும் என அமைச்சர் ரத்நாயக்க கூறினார்.

பாராளுமன்ற நிலைக் கட்டளைகளுக்கு இணங்க, சபாநாயகருக்கு எதிரான திருத்தப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சி சமர்ப்பித்தால், 2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (Appropriation Bill) மீதான விவாதம் தொடங்குவதற்கு முன்னர் விவாதத்திற்கான நேரத்தை அரசாத்தால் ஒதுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gajendran
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை அகற்ற பொலிஸ் உத்தரவு: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடும் கண்டனம்!
IPKF1
கடைகள் தீப்பற்றி எரிந்தன வீதிகளில் மருத்துவமனைகளில் -உடல்கள் - 1987 இல் சாவகச்சேரி சந்தை மீது இந்திய அமைதிப்படையினரின் தாக்குதல் - வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் பதிவுகள்
GSP-EU
முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலங்களால் ஜிஎஸ்பி வரிச்சலுகைக்கு ஆபத்து - இலங்கை வர்த்தக சம்மேளனம்
Galle-Face-Green
ஷாங்கிரி-லா நில ஒப்பந்த விவகாரம்: 13.7 பில்லியன் ஒப்பந்தம் வெறும் 3 நாட்களில் முடிக்கப்பட்டது எப்படி?
aalaipty
அல்லைப்பிட்டியில் 17 வயது சிறுவன் கொல்லப்பட்டு ஒன்பது மாதங்கள்-சந்தேகநபர்கள் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை- பொறுப்புக்கூறவேண்டிய பதவிகளில் இருப்பவர்கள் மௌனம்
880882249_3599136446929888_1124040596592553945_n
பொலிஸ் சித்திரவதை, படுகொலைகளை நிறுத்து!
sarath weera
சிசிடிவி காட்சி கசிவு விவகாரம்: கிங்ஸ்பரி ஹோட்டலுக்கு எதிராக 100 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி சரத் வீரசேகர சட்டத்தரணி மூலம் அறிவித்தல்
568923f6-7c2f-478f-81b2-169ec5b17479
லண்டனில் மொடலிங்கில் ஆர்வமுள்ள பெண்ணை இலக்குவைத்து பாலியல்வன்முறை – தமிழ் புகைப்பட கலைஞருக்கு 11 ஆண்டுகள் சிறை
c46f3f94-d3a8-427c-bb54-f2b7da82ce1a
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை உடனடியாக விலக்கிகொள்ளவேண்டும் - சர்வதேச மன்னிப்புச்சபை
874399966_18606338194066090_8535340139594857650_n
போர்முடிவடைந்து 17 வருடங்கள் - இனப்படுகொலையின் வடுக்கள் இன்னமும் ஆறவில்லை என கனடா நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு