சிசிடிவி காட்சி கசிவு விவகாரம்: கிங்ஸ்பரி ஹோட்டலுக்கு எதிராக 100 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி சரத் வீரசேகர சட்டத்தரணி மூலம் அறிவித்தல்

கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலுக்கு (The Kingsbury Hotel) தான் சென்று வந்த சிசிடிவி காட்சிகள் (CCTV footage) வெளியிடப்பட்டதாகக் கூறி, 100 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்குத் தொடரப்போவதாக முன்னாள் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர சட்டத்தரணி மூலம் கோரிக்கை அறிக்கை (Letter of Demand) ஒன்றை அனுப்பியுள்ளார்.

அக்டோபர் 29 ஆம் திகதியிடப்பட்ட இந்த அறிவித்தல், அவரது சட்டத்தரணிகளான ‘பெரேரா செனவிரத்ன அசோசியேட்ஸ்’ மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அக்டோபர் 24 ஆம் திகதி அவர் ஹோட்டலுக்குச் சென்றபோது பதிவுசெய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள்  (manipulated), பல சமூக ஊடகத் தளங்களில் பரப்பப்பட்டுள்ளதாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சரத் வீரசேகரவும் பௌத்த துறவி ஒருவரும் ஒன்றாகவோ அல்லது ஒரே நேரத்திலோ ஹோட்டல் அறைக்குள் நுழைந்தது போன்ற தவறான தோற்றத்தை உருவாக்குவதற்காக இந்தக் காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் காட்சிகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள பிம்பம் முற்றிலும் பொய்யானது என அவரது சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தசத லங்கா நியூஸ் (Dasatha Lanka News), சேனல் 4 (Channel 4), குணே அய்யாகே காமரே (Gune Aiyage Kamare) மற்றும் சைபர் நியூஸ் எல்கே (Cyber News LK) உள்ளிட்ட பல ஃபேஸ்புக் பக்கங்கள் மற்றும் யூடியூப் சேனல்களை நடத்தும் நபர்களுடன் இணைந்து, ஹோட்டல் நிர்வாகமே இந்தச் சிசிடிவி காட்சிகள் அல்லது புகைப்படங்களை வெளியிட்டதாக அந்த அறிவித்தலில் மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், ஒரு ஃபேஸ்புக் பக்கம் தனது செயலாளரை உள்ளடக்கி தவறான உரிமைகோரலுடன் இந்த வீடியோவை வெளியிட்டதாகவும், அந்த நபரை முன்னாள் தேசிய உளவுத்துறைத் தலைவர் ஹெண்டவிதாரண எனத் தவறாக அடையாளம் காட்டியுள்ளதாகவும் வீரசேகரவின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

அசல் சிசிடிவி பதிவுகள் ஹோட்டலின் பிரத்தியேகக் கட்டுப்பாட்டில் இருந்ததால், ஹோட்டல் நிர்வாகத்தின் அறிவோ அல்லது தலையீடோ இன்றி அவை வெளியாகியிருக்க முடியாது என்றும் வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர்.

வீரசேகரவின் சம்மதமின்றி இக்காட்சிகள் வெளியிடப்பட்டதானது அவரது தனிப்பட்ட சுதந்திரத்தை (privacy) மீறுவதாகவும், ஹோட்டலின் சொந்தத் தனியுரிமைக் கொள்கையை மீறுவதாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காட்சிகள் பரப்பப்பட்டதைத் தொடர்ந்து, சரத் வீரசேகர கடுமையான இணையவழித் துன்புறுத்தல், மன உளைச்சல் மற்றும் நற்பெயருக்குக் களங்கம் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பதாக அந்த அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் கிடைத்து 7 நாட்களுக்குள், இக்காட்சிகளைப் பார்வையிட்டது, மாற்றியமைத்தது அல்லது வெளியிட்டது யார் என்பதை அடையாளம் கண்டு, அந்த நபர்கள் அல்லது அமைப்புகளின் விபரங்களை ஹோட்டல் நிர்வாகம் வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் கோரியுள்ளார்.

அத்துடன், இணையத் தளங்களில் இருந்து அந்த வீடியோ காட்சிகளை அகற்றுதல்,  எழுத்துப்பூர்வ மன்னிப்பு கோருதல் மற்றும் இனிமேல் இதுபோன்ற அனுமதி அற்ற வெளியீடுகள் இடம்பெறாது என உறுதியளித்தல் ஆகியவற்றையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இக்கோரிக்கைகளுக்கு இணங்கத் தவறினால், எவ்வித முன்அறிவிப்புமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவதூறு, தனியுரிமை மீறல், நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கம் மற்றும் மன உளைச்சலுக்காக 100 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோருவதற்கும் வீரசேகரவுக்கு உரிமை உண்டு என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பில் பொலிஸார், இணையவழி பாதுகாப்பு ஆணைக்குழு (Online Safety Commission) மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகாரசபை (SLTDA) ஆகியவற்றிடம் முறைப்பாடு செய்யப்படலாம் என்றும் அவரது சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gajendran
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை அகற்ற பொலிஸ் உத்தரவு: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடும் கண்டனம்!
IPKF1
கடைகள் தீப்பற்றி எரிந்தன வீதிகளில் மருத்துவமனைகளில் -உடல்கள் - 1987 இல் சாவகச்சேரி சந்தை மீது இந்திய அமைதிப்படையினரின் தாக்குதல் - வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் பதிவுகள்
GSP-EU
முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலங்களால் ஜிஎஸ்பி வரிச்சலுகைக்கு ஆபத்து - இலங்கை வர்த்தக சம்மேளனம்
Galle-Face-Green
ஷாங்கிரி-லா நில ஒப்பந்த விவகாரம்: 13.7 பில்லியன் ஒப்பந்தம் வெறும் 3 நாட்களில் முடிக்கப்பட்டது எப்படி?
aalaipty
அல்லைப்பிட்டியில் 17 வயது சிறுவன் கொல்லப்பட்டு ஒன்பது மாதங்கள்-சந்தேகநபர்கள் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை- பொறுப்புக்கூறவேண்டிய பதவிகளில் இருப்பவர்கள் மௌனம்
880882249_3599136446929888_1124040596592553945_n
பொலிஸ் சித்திரவதை, படுகொலைகளை நிறுத்து!
568923f6-7c2f-478f-81b2-169ec5b17479
லண்டனில் மொடலிங்கில் ஆர்வமுள்ள பெண்ணை இலக்குவைத்து பாலியல்வன்முறை – தமிழ் புகைப்பட கலைஞருக்கு 11 ஆண்டுகள் சிறை
BIMAL1
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நவம்பர் 3ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது - அரசாங்கம்
c46f3f94-d3a8-427c-bb54-f2b7da82ce1a
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை உடனடியாக விலக்கிகொள்ளவேண்டும் - சர்வதேச மன்னிப்புச்சபை
874399966_18606338194066090_8535340139594857650_n
போர்முடிவடைந்து 17 வருடங்கள் - இனப்படுகொலையின் வடுக்கள் இன்னமும் ஆறவில்லை என கனடா நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு