முன்மொழியப்பட்டுள்ள பாதுகாப்பு சட்டமூலங்களில் தெளிவான சட்டவரைவிலக்கணங்கள்,போதுமான நீதித்துறை மேற்பார்வை,மற்றும் உரிய சட்டநடைமுறை பாதுகாப்புகள் காணப்படுவதை உறுதிசெய்யுமாறு இலங்னை வர்த்தக சம்மேளனம் அரசாங்கதை வலியுறுத்தியுள்ளது.
இலங்கை வர்த்தக சம்மேளனம் மேலும் தெரிவித்துள்ளதாவது
முன்மொழியப்பட்டுள்ள அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பான எங்கள் அவதானிப்புகளை சமர்ப்பித்துள்ளோம்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பான சட்டமூலத்தினை ஆய்வு செய்துவருகின்றோம் அது தொடர்பிலான அவதானிப்புகளை விரைவில் சமர்ப்பிப்போம்.
தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் உருவெடுத்துவரும் சவால்களை எதிர்கொள்வதற்கும் அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளை ஏற்றுக்கொள்கின்ற போதிலும்,முன்னறிவிக்ககூடிய மற்றும் விதிகள் சார்ந்த வணிகச்சூழலை பேணுவதற்கு தேவையான பாதுகாப்புகளுடன் பாதுகாப்பு நோக்கங்களை சமநிலைப்படுத்துவதை உறுதி செய்வதற்கு சட்டமூலத்தை கவனமாக மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முதலீட்டாளர் நம்பிக்கை சட்டநிச்சயத்தன்மை மற்றும் வர்த்தக மற்றும் முதலீட்டிற்கான தளமாக இலங்கையின் பெயரை பாதுகாப்பதற்கு தெளிவான சட்டவிதிகள் மற்றும் பொருத்தமான மேற்பார்வை அவசியம்.
ஏற்றுமதிவேலைவாய்ப்பு அந்நிய செலவாணி வருமானம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிசலுகைக்கான அணுகலை பேணுவதும் அவசியம்.
இலங்கையின் புதிய சட்டங்கள் இலங்கையின் சர்வதேச கடப்பாடுகள் மற்றும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளுடன் ஒத்துப்போவதை உறுதி செய்யவேண்டும் இது ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை நன்மைகளை தக்கவைத்துக்கொள்வதற்கான வாய்ப்புகளை வலுப்படுத்தும் என இலங்கை வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.