தேர்தல் வெற்றிக்குப் பிறகு 2028 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் முன்னணி வேட்பாளராக ‘அடுத்த பராக் ஒபாமா’ உருவெடுத்துள்ளார்

அமெரிக்க இடை தேர்தலில் ஜோர்ஜியா மாகாணத்தில் பெற்ற தீர்க்கமான மறுதேர்தல் வெற்றியைத் தொடர்ந்து 2028 ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டிப் பந்தயத்தில் அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர் ஜோன் ஒசாஃப் முன்னணி வேட்பாளராக உருவெடுத்துள்ளார்.

 

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் ஒப்பிடப்படும் 39 வயதான இந்த செனட்டரின் வெற்றி வாய்ப்புகள் ‘Polymarket.கணிப்புச் சந்தையில் உயர்ந்துள்ளன.

‘தி இன்டிபென்டன்ட்’ ஊடகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்புமனுவைக் கைப்பற்றுவதற்கான ஒசாஃப்பின் கணிப்புச் சந்தை நிகழ்தகவு24 மணி நேரத்திற்குள் 9 சதவீதம் அதிகரித்து 24 வீதமாகஆக உயர்ந்துள்ளது.

மேலும் 2028 தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அவரது நிகழ்தகவு சுமார் 18வீதமாக ஆக உயர்ந்துள்ளது. இது இப்போதைய நிலவரப்படி ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ-கோர்டேஸ் மற்றும் குடியரசுக் கட்சியின் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஆகியோரை விட அவரை முன்னிலையில் நிறுத்தியுள்ளது.

ஜோர்ஜியாவில் குடியரசுக் கட்சியின் சவாலாளர் மைக் காலின்ஸை எதிர்த்துப் போட்டியிட்ட ஒசாஃப் சுமார் 58.9 வீதவாக்குகளையும் 2.4 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளையும் பெற்று தனது மறுதேர்தல் வெற்றியை உறுதி செய்தார்.

தனது வெற்றியைத் தொடர்ந்து பேசிய ஒசாஃப்ர் டொனால்ட் டிரம்பைக் கடுமையாக விமரிசித்துப் பேசினார். டிரம்பை ஒரு தோல்வியடைந்த ஜனாதிபதி என்று வர்ணித்த அவர் அவரது நிர்வாகத்தின் மீது ஊழல் மற்றும் திறமையின்மைக் குற்றச்சாட்டுகளையும் சுமத்தினார்.

2021 இல் முதன்முதலில் செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒசாஃப் தனது .உரையாற்றும் பாணி ஒப்பீட்டளவில் இளம் வயது மற்றும் ஜனநாயகக் கட்சியின் பல்வேறு பிரிவினரைக் கவரும் திறன் ஆகியவற்றால் ஒபாமாவுடன் ஒப்பிடப்படுகிறார்.

அவரது தேர்தல் பிரச்சாரத்திற்கு 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டதாகக் கூறப்படுகிறதுஇது அவரது தேசிய அளவிலான அரசியல் லட்சியங்களின் மீதான கவனத்தை மேலும் ஈர்த்துள்ளது.

அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ-கோர்டேஸ் மற்றும் கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் உட்பட பிற முக்கிய ஜனநாயகக் கட்சியினரும் 2028 ஆம் ஆண்டிற்கான கட்சியின் வேட்பாளர் போட்டியில் இடம்பெற்றுள்ளனர்.

இருப்பினும் குறிப்பிடப்பட்டுள்ள இந்த எண்கள் பொதுக்கருத்துக் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை அல்ல மாறாக கணிப்புச் சந்தை வர்த்தகத்தை ) அடிப்படையாகக் கொண்டவை என்பதால் இவை உத்தியோகபூர்வ வேட்புமனுவையோ அல்லது தேர்தல் முடிவின் நம்பிக்கையான கணிப்பையோ குறிக்கவில்லை

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

rajeevkanth nove
ஒரு அடக்குமுறையான சூழலை நோக்கி நாங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றோம்
duminda 112
சுதந்திரம் பறிக்கப்பட்ட நாளில்தான் அதன் முக்கியத்துவம் நமக்குத் தெரியவரும்- துமிந்த நாகமுவ
jordan embas
ஜோர்தானில் இலங்கை தூதரகத்திற்கு வெளியே பயங்கரவாதத் தாக்குதல் -பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு
anura oct
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலம் - அரசாங்கம் பேச்சுவார்த்தைகளுக்கு தயார் என்கின்றார் அனுர
Gotabaya-Rajapaksa-L
பைபாஸ் சத்திர சிகிச்சைக்குப் பிறகு கோட்டாபயவிற்கு சிங்கப்பூரில் மருத்துவப் பரிசோதனைகள்தேவைப்படுகின்றன- வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில்
wijeya son
விஜயதாசவின் மகனின் வாகனங்கள் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவு
ABDUL
தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்பின் கடும் விமர்சனத்தை எதிர்கொண்ட அப்துல் -எல்சயத் முதல் முஸ்லீம் செனட்டராக வரலாற்றை படைத்தார்-
pstano15
இலங்கை அரசாங்கம் பாசிச அரசாக மாறப்போவதாக அச்சுறுத்துகின்றது -
suresh11
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சுரேஸ்சாலே குறித்து முக்கிய தகவல்களை நீதிமன்றத்தில்வெளியிட்டது குற்றப்புலனாய்வு திணைக்களம்
Mujibur-Rahman-L
கொழும்பில் இடம்பெற்ற ஆசிய ஒலிபரப்பு சங்கத்தின்மாநாட்டிற்கு அரசாங்கம் 100 மில்லியனை வழங்கியதா?