தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்பின் கடும் விமர்சனத்தை எதிர்கொண்ட அப்துல் -எல்சயத் முதல் முஸ்லீம் செனட்டராக வரலாற்றை படைத்தார்-

எழுதியவர்: நிகி போப்லி (Nik Popli)

TIMES

முற்போக்குச் சிந்தனையாளரான அப்துல் எல்-சயத், மிச்சிகன் மாகாணத்தின்  செனட் இடத்திற்கான கடுமையான போட்டியில் குடியரசுக் கட்சியின் மைக் ரோகர்ஸைத் தோற்கடித்துள்ளார். இது அமெரிக்காவின்  மிக முக்கியமான போட்டி மாநிலங்களில் ஒன்றில், ஜனநாயகக் கட்சியின் இடதுசாரி அணிக்குக் கிடைத்த ஒரு திருப்புமுனை வெற்றியாகும்.

பொதுச் சுகாதாரப் பின்னணியைக் கொண்ட முற்போக்கு ஜனநாயகக்வாதியான டாக்டர் அப்துல் எல்-சயத், செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற மிச்சிகனின் செனட் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைக் ரோகர்ஸைத் தோற்கடித்ததாக ‘அசோசியேட்டட் பிரஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அவர் அமெரிக்க செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் அந்தச் செனட் இடம் ஜனநாயகக் கட்சியின் வசமே தொடர்கிறது. நடப்பு இடைக்காலத் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியின் அலையைத் தடுத்து நிறுத்த குடியரசுக் கட்சிக்கு இருந்த சிறந்த வாய்ப்புகளில் ஒன்றை இந்த முடிவு தடுத்துள்ளது.

தற்போதைய நாடாளுமன்றக் காலத்தின் முடிவில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் கேரி பீட்டர்ஸ் ஓய்வுபெறவிருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு  டிரம்ப் இரண்டு சதவீத வாக்கு வித்தியாசத்தில் கைப்பற்றிய மிச்சிகன் மாகாணத்தில் இந்தத் தேர்தல் நாட்டின் மிகக் கடுமையான போட்டிகளில் ஒன்றாக மாறியிருந்தது.

எகிப்தியர்களின் மகனாகப் பிறந்து டெட்ராய்ட் புறநகர்ப் பகுதியில் வளர்ந்த 42 வயதான எல்-சயத்தின் இந்தத் தேர்தல் வெற்றி, அமெரிக்க அரசியலில் ஒரு மைல்கல்லாகவும், ஜனநாயகக் கட்சியில் ஏற்படக்கூடிய குறிப்பிடத்தக்க மாற்றமாகவும் பார்க்கப்படுகிறது. இஸ்ரேலை வெளிப்படையாக விமர்சித்து வருபவரும், இலட்சிய முற்போக்குத் திட்டங்களை முன்னெடுத்து வருபவருமான அவர், இந்த ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ள வளர்ந்து வரும் இடதுசாரி ஜனநாயகக் வாதிகளின் அணியில் இணைகிறார்.

Getty Images El Sayed at a campaign rally

இருப்பினும், பாதுகாப்பான ஜனநாயகக் கட்சித் தொகுதிகளில் கிடைத்த மற்ற முற்போக்கு வெற்றிகளைப் போலன்றி, தொழிலாள வர்க்க வாக்காளர்கள், புறநகர் மிதவாதிகள் மற்றும் மாறுபட்ட வாக்காளர்களைக் கவர இரு கட்சிகளும் பல ஆண்டுகளாகப் போட்டியிட்டு வரும் ஒரு நெருக்கடியான மாகாணத்தில் எல்-சயத்தின் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

அதிதீவிர முற்போக்கு வேட்பாளர்கள் போட்டி மாநிலங்களில் வெற்றி பெற முடியாத அளவுக்கு அரசியல் ரீதியாக பலவீனமானவர்கள் என்ற மிதவாதத் தலைவர்களின் வாதத்திற்கு எல்-சயத்தின் வெற்றி ஒரு சிறந்த எதிர்வாதத்தை வழங்குகிறது.

சோசலிச முத்திரையை நிராகரிக்கும் எல்-சயத், இஸ்ரேல் விவகாரத்தில் ஜனநாயகக் கட்சியினரிடையே ஆழமான பிளவை வெளிப்படுத்திய கடுமையான தேர்தல் பிரச்சாரத்தையும், இஸ்ரேல் சார்பு குழுக்களின் பல மில்லியன் டொலர் செலவினங்களையும் மீறி வெற்றி பெற்றுள்ளார்.

தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் சர்ச்சைகள் நிறைந்த தேர்தல் களம்

தேர்தலின் இறுதி வாரங்களில் இப்போட்டி மிகவும்  வகையில் கடுமையானதாக மாறியது.மாறியது. டிரம்பும் பிற குடியரசுக் தலைவர்களும் இஸ்லாபோபோபியா (Islamophobia) கருத்துக்களைப் பயன்படுத்தி, எல்-சயத் அமெரிக்கப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று சித்தரித்தனர். 9/11 தாக்குதலை அமெரிக்கா தப்பியது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்த ஹசன் பிகருடன் இணைந்து பிரச்சாரம் செய்ததற்காக அவர் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

இஸ்ரேல் மீதான விமர்சனங்கள் மற்றும் அமெரிக்க இராணுவ உதவி உள்நாட்டுத் தேவைகளைப் பாதிக்கிறது என்ற அவரது கூற்றுகள் காரணமாக, சில யூத வாக்காளர்கள் அவர் யூத எதிர்ப்புப் பிரசாரத்தில் (Antisemitic rhetoric) ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டினர். (இஸ்ரேல் அரசு மீதான தனது விமர்சனத்தை யூத மக்கள் மீதான விரோதத்துடன் குழப்பக் கூடாது என்று எல்-சயத் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்).

தேர்தலுக்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு மிச்சிகனில் நடைபெற்ற பேரணியில் பேசிய டிரம்ப், எல்-சயத் ‘முஸ்லிம் சகோதரத்துவம்’ அமைப்பைச் சேர்ந்தவர் என எந்த ஆதாரமுமின்றித் தெரிவித்தார். மேலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்பும் மற்றவர்களும் எல்-சயத்தின் நடுப்பெயரான ‘முகமது’ என்பதை அடிக்கடிப் பயன்படுத்தி விமர்சித்தனர். குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக் ரோகர்ஸும் எல்-சயத்தின் குடும்பத்திற்கும் முஸ்லிம் சகோதரத்துவத்திற்கும் தொடர்பு இருப்பதாக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எழுப்பினார்.

Michigan Democratic Sen.-elect Abdul El-Sayed speaks alongside his wife, Sarah Jukaku, at an election night watch party at the Department at Hudson's in Detroit on Wednesday.

முற்போக்குக் கொள்கைகளும் இஸ்ரேல் விவகாரமும்

அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு (Medicare for All), செல்வந்தர்கள் மீது கூடுதல் வரி மற்றும் அமெரிக்க அரசியலில் கார்ப்பரேட் பணத்தின் தாக்கத்திற்கு எதிரான விரிவான முற்போக்குக் கொள்கைகளின் அடிப்படையில் எல்-சயத் பிரச்சாரம் செய்தார்.

அதேவேளையில், காசா போரை இனப்படுகொலை என்று வர்ணித்துள்ள அவர், இஸ்ரேலுக்கான அமெரிக்க உதவி பள்ளிகள் மற்றும் சுகாதாரம் போன்ற உள்நாட்டுத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வாதிட்டார். இவரது இந்த நிலைப்பாடுகள் ஜனநாயகக் கட்சியின் பெரும்பான்மையான தலைமைக்கு முரணாக அமைந்ததோடு, AIPAC போன்ற பலத்த லாபியிங் அமைப்புகளின் பிரதான இலக்காகவும் அவரை மாற்றியது.

இதனிடையே, மிதவாத ஜனநாயகக் கட்சியினருக்கும் எல்-சயத்திற்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் காரணமாக, தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பு ஹேலி ஸ்டீவன்ஸ் குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக் ரோகர்ஸை ஆதரிப்பதாக பகிரங்கமாக அறிவித்தார். இது கட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எவ்வாறாயினும், அனைத்துச் சவால்களையும் தாண்டி எல்-சயத் வெற்றி பெற்றுள்ளார். டிரம்ப் மீதான அதிருப்தி மிச்சிகனில் நீடிக்கிறது என்பதை இந்தத் தேர்தல் முடிவு உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். வெளியுறவுக் கொள்கை, பொருளாதார சமத்துவமின்மை மற்றும் செல்வந்தர்களின் தாக்கம் தொடர்பான முற்போக்குக் கொள்கைகளைக் கொண்டுள்ள எல்-சயத்தின் இந்த வெற்றி, ஜனநாயகக் கட்சி எதிர்காலத்தில் எந்த மாதிரியான கட்சியாக மாற வேண்டும் என்ற விவாதத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

anura oct
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலம் - அரசாங்கம் பேச்சுவார்த்தைகளுக்கு தயார் என்கின்றார் அனுர
Gotabaya-Rajapaksa-L
பைபாஸ் சத்திர சிகிச்சைக்குப் பிறகு கோட்டாபயவிற்கு சிங்கப்பூரில் மருத்துவப் பரிசோதனைகள்தேவைப்படுகின்றன- வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில்
wijeya son
விஜயதாசவின் மகனின் வாகனங்கள் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவு
pstano15
இலங்கை அரசாங்கம் பாசிச அரசாக மாறப்போவதாக அச்சுறுத்துகின்றது -
suresh11
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சுரேஸ்சாலே குறித்து முக்கிய தகவல்களை நீதிமன்றத்தில்வெளியிட்டது குற்றப்புலனாய்வு திணைக்களம்
Mujibur-Rahman-L
கொழும்பில் இடம்பெற்ற ஆசிய ஒலிபரப்பு சங்கத்தின்மாநாட்டிற்கு அரசாங்கம் 100 மில்லியனை வழங்கியதா?
canada usa
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள்: வரி நிவாரணம் பெறுவதில் நம்பிக்கைக் கொண்டுள்ள கனடியர்களுக்கு இது ஒரு 'வெற்றி
parliment
50 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் சபாநாயகரைப் அரசாங்கம் ஏன் பாதுகாக்கிறது?
Gotabaya Rajapakasa
நவம்பர் 25-ல் தீர்ப்பு: வெளிநாட்டுப் பயணம் குறித்த தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் கோட்டாபய
gajendra
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடாக கொண்டுவரப்படுகின்ற மூன்று சட்டங்களும் மிகமோசமானவை- கஜேந்திரகுமார்