கொழும்பில் இடம்பெற்ற ஆசிய ஒலிபரப்பு சங்கத்தின்மாநாட்டிற்கு அரசாங்கம் 100 மில்லியனை வழங்கியதா?

கொழும்பில் நடைபெற்ற ஆசிய ஒலிபரப்பு சங்கத்தின் மாநாட்டிற்கு நிதியளிப்பதற்காகத் தனியார் தொலைக்காட்சிஅலைவரிசையொன்றிற்கு அரசாங்கம் 100 மில்லியனை வழங்கியமை நாடாளுமன்றத்தில் கடும் விவாதத்திற்குள்ளானது.
இதேபோன்றதொரு குற்றசாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் இதற்கு எவ்வாறு அனுமதியளித்தது என எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
கொழும்பில் இடம்பெற்ற ஏபியு மாநாட்டிற்காக அரசாங்கம் 100 மில்லியன் ரூபாவை தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்றிற்கு வழங்கியுள்ளது.
இவ்வாறானதொரு நோக்கத்திற்காக திறைசேரி எவ்வாறு நிதியை விடுவித்தது.
இந்த மாநாட்டிற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என ஊடகதுறை அமைச்சர் தெரிவித்தார் அப்படியானால் ஜனாதிபதி ஏன் நிதி ஒப்புதலை கோரி அமைச்சரவையின் ஒப்புதலை நாடவேண்டும்?
அமைச்சரவை கூட்டத்தின்போது அமைச்சர் ஏன் பொய்சொன்னார் என்ற கேள்வி எழுகின்றது.
மேலும் இதேபோன்றதொரு சம்பவத்தில் சுற்றுலா மேம்பாட்டுக்கு என தெரிவித்து சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபாயினை பயன்படுத்தி ரிசேர்ட்களை தயாரித்தார் என கூறி அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் நீதி அனைவருக்கும் சமமானது. என அவர் தெரிவித்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

anura oct
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலம் - அரசாங்கம் பேச்சுவார்த்தைகளுக்கு தயார் என்கின்றார் அனுர
Gotabaya-Rajapaksa-L
பைபாஸ் சத்திர சிகிச்சைக்குப் பிறகு கோட்டாபயவிற்கு சிங்கப்பூரில் மருத்துவப் பரிசோதனைகள்தேவைப்படுகின்றன- வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில்
wijeya son
விஜயதாசவின் மகனின் வாகனங்கள் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவு
ABDUL
தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்பின் கடும் விமர்சனத்தை எதிர்கொண்ட அப்துல் -எல்சயத் முதல் முஸ்லீம் செனட்டராக வரலாற்றை படைத்தார்-
pstano15
இலங்கை அரசாங்கம் பாசிச அரசாக மாறப்போவதாக அச்சுறுத்துகின்றது -
suresh11
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சுரேஸ்சாலே குறித்து முக்கிய தகவல்களை நீதிமன்றத்தில்வெளியிட்டது குற்றப்புலனாய்வு திணைக்களம்
canada usa
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள்: வரி நிவாரணம் பெறுவதில் நம்பிக்கைக் கொண்டுள்ள கனடியர்களுக்கு இது ஒரு 'வெற்றி
parliment
50 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் சபாநாயகரைப் அரசாங்கம் ஏன் பாதுகாக்கிறது?
Gotabaya Rajapakasa
நவம்பர் 25-ல் தீர்ப்பு: வெளிநாட்டுப் பயணம் குறித்த தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் கோட்டாபய
gajendra
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடாக கொண்டுவரப்படுகின்ற மூன்று சட்டங்களும் மிகமோசமானவை- கஜேந்திரகுமார்