நாடாளுமன்றத்திற்கு அருகில் புதன்கிழமை அரசாங்கத்தின் பாதுகாப்பு சட்டமூலங்களுக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்
இன்று நாங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை… புதிய பயங்கரவாத அரசுக்கு எதிரான பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து இங்கு மாபெரும்
போராட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கின்றோம். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக அரசாங்கம் புதிய மோசமான பயங்கரவாத தடைச்சட்டம் ஒன்றை கொண்டுவருவதற்கான சகல முயற்சிகளையும் செய்து, இன்று பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட
இருந்தது; ஆனால் பின்வாங்கி இருக்கின்றார்கள்.
இந்த சட்டம் அடிப்படையிலே மக்களினுடைய உரிமையை மிக மோசமாக பாதிக்கின்றது என்பதை நாங்கள் தொடர்ச்சியாக கூறிக்கொண்டிருக்கின்றோம். இந்த சட்டத்தினுடைய விளைவுகள் என்னவென்றால்,
அப்பாவி மக்கள் ஒடுக்கப்படப் போகின்றார்கள். சாதாரண செயற்பாட்டாளர்கள் கைதாகப் போகின்றார்கள். தொழிற்சங்க நடவடிக்கைகள் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்படப் போகின்றார்கள். எனவே, இந்த அடக்குமுறையான மோசமான சட்டங்களை எதற்காக
இந்த அரசு கொண்டுவருகின்றது என்ற பயம் எங்களுக்கு இருக்கின்றது.

மாபெரும் ஒரு அடக்குமுறையான சூழலை நோக்கி நாங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற சிந்தனை இருக்கின்றது. இன்று இங்கு இடம்பெறுகின்ற போராட்டத்தின் மூலமாக நாங்கள் அரசுக்குச் சொல்ல
நினைப்பது ஒன்றுதான். இன்று எப்படி பின்வாங்குனார்களோ, இந்த சட்டத்தை உடனடியாக கிழித்தெறிய வேண்டும். அவர்கள் இந்த ஆட்சிக்கு வரும் முன்னர் எப்படியெல்லாம் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கினார்களோ, இந்தத் தடைச்சட்டத்தை
கொண்டுவர மாட்டோம் என்றபடியான உறுதிமொழிகளை வழங்கினார்களோ, அதனை நிறைவேற்ற வேண்டும் என்று. நாங்கள் இந்த அரசிடம் மீண்டும் ஒருமுறை மிகவும் வலிமையாக கேட்டுக்கொள்கின்றோம்;
இல்லாவிட்டால் எங்களுடைய போராட்டங்கள் தொடர்ந்து இடம்பெறும். எந்த ஒரு அடக்குமுறை சட்டத்திற்கும் நாங்கள் அடிபணியப் போவதில்லை; எந்த ஒரு அடக்குமுறை சட்டத்தையும் நாங்கள் இந்த நாட்டில்
ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை.