.போலந்து நாட்டின் கிராக்கோவ் (Krakow) நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பன்னிரண்டுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் போலந்து காவல்துறை தெரிவித்துள்ளது.

“பிரதான சந்தைச் சதுக்கத்தில் (Main Market Square) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது” என்று ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதுடன், “அவசரகால சேவைப் பணியாளர்கள் ஏற்கனவே சம்பவ இடத்திலுள்ளனர்” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளால் சுடப்பட்ட சந்தேக நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் காவல்துறை கூறியுள்ளது.
சமூக ஊடகப் பதிவு ஒன்றில், போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) இச்சம்பவத்தை “துயரமானது” என்று வர்ணித்துள்ளதுடன், இது குறித்த நிலவரங்கள் தமக்குத் தொடர்ந்து தெரியப்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.