ஓழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் குறித்த சட்ட மூலத்தில் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை குறைப்பது உட்பட குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சமர்ப்பிக்கப்பட்டுள்ள தற்போதைய சட்டமூலத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பல விடயங்களை நீக்கவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடக்குமுறைக்கு பயன்படக்கூடிய எந்த சரத்தும் நீக்கப்படும் என அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
குற்றக்கும்பல்களை சேர்ந்தவர்களை இனம் காண்பதற்காக பச்சை குத்துதல் சிகையலங்காரம் போன்ற வெளிப்புற தோற்றங்கள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களும் நீக்கப்படலாம்.
சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இவ்வாறான சட்டங்கள் காணப்படுகின்றன எனினும் பொதுமக்களின் கரிசனை காரணமாக நாங்கள் அதனை கைவிட தீர்மானித்துள்ளோம் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.