ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்திற்காக தனது உயிரை கொடுக்க தயார் என தெரிவித்துள்ள -இராஜாங்கனேய சத்தாரத்ன தேரர் தேரர் தன்னை துண்டுதுண்டாக வெட்டினாலும் உயிரை தியாகம் செய்ய தயாராகயிருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
எனது முதுகுதண்டை இலக்குவைத்து தாக்கியபோதிலும் கழுத்துபகுதியே தாக்கப்பட்டதால் உயிர்தப்பினேன்.
இந்த ஜனாதிபதி ஒரு மிகச்சிறந்த பௌத்தர்,பஞ்சசீலத்தை கடைப்பிடிப்பவரே உண்மையான பௌத்தர்.
கஸ்ஸப்ப தேரர் போன்றவர்கள் ஜனாதிபதியை அரசாங்கத்தை நியாயமற்ற முறையில் அவமதித்து நாட்டை அழிக்க முற்பட்டால் நான் கடுமையான நடவடிக்கை எடுப்பேன்.
நான் மருத்துவமனையில் இருந்தபோது ஜனாதிபதியின் மனைவி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு எனது நலன் குறித்து விசாரித்தார் நான் இதனை எதிர்பார்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.