சிறுமிகளின் காகித பை ஸ்டார்ட் அப் நிறு​வனம்

பெங்​களூரு: கர்​நாடக தலைநகர் பெங்​களூரு​வின் பசவேஸ்​வரநகர் பகு​தியை சேர்ந்த சிறுமிகள் சார​தா, சம்​யுக்​தா, சிறு​வன் நசிகேதன் ஆகியோர் ஒரே பள்​ளி​யில் படித்து வரு​கின்​றனர். பிளாஸ்​டிக் ஒழிப்பு விழிப்​புணர்​வுக்​காக பள்​ளி​யில் 3 பேருக்​கும் அண்​மை​யில் காகித பை தயாரிக்​கும் பயிற்சி அளிக்​கப்​பட்​டது.

இதைத் தொடர்ந்து பிளாஸ்​டிக் ஒழிப்பு குறித்து பொது​மக்​களிடம் விழிப்​புணர்வை ஏற்​படுத்த 3 பேரும் ஒரு​மித்து முடிவு செய்​தனர். இதற்​காக எகோ வாலா என்ற ஸ்டார்ட் அப் நிறு​வனத்தை சிறுமி சாரதா தொடங்​கி​னார். இந்த நிறு​வனத்​தின் மேலா​ள​ராக நசிகேதனும் துணை மேலா​ள​ராக சம்​யுக்​தா​வும் பொறுப்​பேற்​றுக் கொண்​டனர்.

பள்ளி முடிந்த பிறகு மாலை நேரத்​தில் சார​தா, நசிகேதன், சம்​யுக்தா ஆகியோர் பெங்​களூரு​வின் முக்​கிய பகு​தி​களில் காகித பை விற்​பனையை மேற்​கொண்டு வரு​கின்​றனர். அவர்​களது ஸ்டார்ட் அப் நிறு​வனத்​தில் ரூ.10 சந்தா செலுத்தி உறுப்​பின​ராக இணைந்து கொள்​ளலாம்.

ஒவ்​வொரு வார​மும் ஞாயிற்​றுக்​கிழமை 2 காகித பைகளை அவர​வர் வீடு​களுக்கு நேரடி​யாக சென்று சிறுமிகள் விநி​யோகம் செய்​கின்​றனர். கூடு​தல் காகித பைகள் தேவைப்​பட்​டால் அவற்றை விநி​யோகம் செய்​ய​வும் தயா​ராக உள்​ளனர். ஒரு வாடிக்​கை​யாளரிடம் 3 சிறாரும் தங்​களது ஸ்டார்ட் அப் நிறு​வனம் பற்றி எடுத்​துரைக்​கும் வீடியோ வைரலாக பரவி வரு​கிறது. தாங்​கள் தயாரிக்​கும் காகித பையில் பசையை பயன்​படுத்​த​வில்​லை. கத்​தரிக்​கோலை பயன்​படுத்தி காகிதங்​களை வெட்​ட​வில்லை என்று அவர்​கள் வீடியோ​வில் விளக்​கம் அளிக்​கின்​றனர்.

அதோடு விசிட்டிங் கார்​டாக ஒரு துண்​டிச் சீட்​டில் மொபைல் போன் எண்ணை எழு​திக் கொடுக்​கின்​றனர். இந்த வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவி வரு​கிறது. தொழில​திபர் ஹர்ஷ் கோயங்கா உட்பட பல்​வேறு தரப்​பினர் வீடியோவை தங்​களது சமூக வலை​தளங்​களில் பகிர்ந்து சிறாரின்​ ஸ்​டார்​ட்​ அப்​ நிறு​வனம்​ வளர்​ச்​சி அடைய ​வாழ்​த்துகளை தெரிவித்​துள்​ளனர்​.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்