“கொலைகார நுண்கடன் நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்த முடியாததால் பொலனறுவையில் ஒருவர் தீமூட்டி தற்கொலை” பாதிக்கப்பட்டவர்களின் அமைப்பின் தலைவர் தெரிவிப்பு

நுண்கடன் நிறுவனங்களின் ஒழுக்கவிதிகளிற்கு மாறான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கம் உடனடியாக தலையிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் இதுவரை அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகளால் எந்த பலனும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
நுண்கடன் நிறுவனங்கள் பெண்களை துன்புறுத்துவது முடிவிற்கு வரவில்லை என நுண்கடனால் பாதிக்கப்பட்டவர்களின் அமைப்பின் தலைவர் நிரோசா குருகே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நுண்கடன் வழங்கும் 3000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிறுவனங்களை நாங்கள் கொலைகார நிறுவனங்கள் என ஆதாரத்துடன் குறிப்பிடுகின்றோம்
என செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ள அவர் பொலனறுவையில் 2000 ரூபாயினை திருப்பி செலுத்த முடியாததால் நபர் ஒருவர் தனக்குதானே தீமூட்டி உயிரிழந்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
கடன்களை திருப்பி செலுத்த முடியாததால் மக்கள் தற்கொலை செய்கின்றனர் என அரசாங்கமே தெரிவிக்கின்றது அப்படியானால் இந்த நுண்கடன் நிறுவனங்களிற்கு எதிரான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள நிரோசா குருகேஇதேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த விடயத்தில் வழங்கிய வாக்குறுதி நம்பிக்கை அளிக்கவில்லை.
நுண்கடன் நிறுவனங்களால் மூன்றுமில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அடிப்படையாகவைத்தே இந்த நிறுவனங்களின் நடவடிக்கைகளை கணிப்பிடவேண்டும்இஎன அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்