எத்தியோப்பியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஒன்றினால் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூவர்மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் எத்தியோப்பிய அதிகாரிகளால் கூட்டாக மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையைத் (joint operation) தொடர்ந்து, அந்த மூன்று இலங்கையர்களும்விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்த மூன்று நபர்களும், சட்டவிரோதமான முறையில் கனடாவைச் சென்றடைவதற்காக எத்தியோப்பியா வழியாகப் பயணித்தபோது இந்தச் சம்பவத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
எத்தியோப்பியாவில் உள்ள குற்றக் கும்பல் தங்களைச் சிறைப்பிடித்து வைத்துள்ளதாகவும், தங்களை விடுவிக்கப் பிணைத்தொகை (ransom) கோருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையில், இந்தச் சட்டவிரோதப் பயணப் பின்னணியை ஏற்பாடு செய்து உதவியதாகக் கூறப்படும் சந்தேக நபர் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
