எமேர்ஜிங் வுமன்’ மாநாட்டின் ஊடாக வட மாகாண பெண் தொழில்முனைவோரை வலுப்படுத்தும் LIIN நிறுவனம்

 வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோர் உட்பட 200க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள், கிளிநொச்சியிலுள்ள ‘ரீசா பார்க் அண்ட் ரிசோர்ட்’ (ReeCha Park and Resort) வளாகத்தில் நடைபெற்ற ‘எமேர்ஜிங் வுமன்’ (Emerging Women Summit) மாநாட்டில் கலந்துகொண்டனர். நிதி, சந்தை வாய்ப்புகள், தொடர்பாடல் வலையமைப்புகள் மற்றும் வணிக மேம்பாட்டு வாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம் பெண் தலைமைத்துவ வணிகங்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு நடத்தப்பட்டது.

‘லங்கா இம்பாக்ட் இன்வெஸ்டிங் நெட்வொர்க்’ (LIIN) நிறுவனத்தால், ‘வளர்ச்சி, மீளெழுச்சி, முதலீடு மற்றும் பயிற்சி’ (GRIT) திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டிற்கு ‘குளோபல் அஃபியர்ஸ் கனடா’ (Global Affairs Canada) நிதியுதவி வழங்கியதுடன், ‘கனடாவின் உலகப் பல்கலைக்கழக சேவை’ (WUSC) அமைப்பின் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. “வட மாகாண பெண் தொழில்முனைவோருக்கான சந்தை மற்றும் மூலதன வாய்ப்புகளைத் திறத்தல்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெண் தொழில்முனைவோர், அரச நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், வணிக ஆதரவு அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் பலரும் ஒன்றிணைந்திருந்தனர்.

LIIN நிறுவனத்தின் தலைவர் சந்துல அபேவிக்ரமவின் எழுச்சியூட்டும் வரவேற்புரையுடன் மாநாடு ஆரம்பமானது. பிராந்திய வளர்ச்சி மற்றும் பொருளாதார மீளெழுச்சியின் முக்கிய உந்துசக்திகளாக விளங்கும் பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்பதிலும், உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதிலும் LIIN நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

நிகழ்வின் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட வட மாகாண கைத்தொழில் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எஸ். கிருஷ்ணேந்திரன் உரையாற்றுகையில்; வட மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மறுமலர்ச்சிக்கு பெண் தலைமைத்துவ வணிகங்கள் மிக முக்கியமான பங்களிப்பை வழங்குகின்றன என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார். பெண் தொழில்முனைவோர் தங்களது வணிகங்களை விரிவுபடுத்தவும், நிலைநிறுத்தவும் நிறுவன ரீதியிலான ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்துவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

அங்கு உரையாற்றுகையில், வட மாகாண கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் (IDB) பணிப்பாளர் எஸ். சிவகங்காதரன், இப்பிராந்தியம் முழுவதும் உள்ள பெண் தொழில்முனைவோருக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், நிறுவன மேம்பாட்டுச் சேவைகளை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளைச் சுட்டிக்காட்டினார். பங்காளர் அமைப்பின் சார்பில் உரையாற்றிய WUSC ஸ்ரீலங்கா நிறுவனத்தின் நாட்டுக்கான பணிப்பாளர் மும்தாஜ் கலீல், பெண்களின் பொருளாதார வலுவூட்டலில் முதலீடு செய்வதன் மூலம் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், பெண் தலைமைத்துவ வணிகங்கள் செழித்து வளர்வதற்கேற்ற சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.

பெண் தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் மிகநெருக்கடியான சவால்களுக்கு தீர்வுகாணும் வகையில் அமைந்த இரு உயர்மட்டக் கலந்துரையாடல்கள் இம்மாநாட்டின் முக்கிய அம்சமாக விளங்கின.

“வளர்ச்சிக்கான மூலதனம்: பெண் தலைமைத்துவ நிறுவனங்களுக்கான நிதியுதவி” என்ற தலைப்பிலான முதலாவது அமர்வில், பெண் தொழில்முனைவோருக்கான நிதி அணுகலை மேம்படுத்துதல் மற்றும் நிதி ரீதியான தயார்நிலையை வலுப்படுத்துவதற்கான நடைமுறை வழிகள் குறித்து ஆராயப்பட்டது. ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, பெண்களுக்கான பொருளாதார சம்மேளனம் மற்றும் டி.எஃப்.சி.சி (DFCC) வங்கி ஆகியவற்றின் குழுவினர் இதில் கலந்துகொண்டு, அரச ஆதரவுத் திட்டங்கள், நிதி எழுத்தறிவு, வணிகப் பதிவு, கணக்குப்பதிவியல் நடைமுறைகள், வரி இணக்கம் மற்றும் நிதி உதவிகளைப் பெறும்போது நம்பகத்தன்மையைக் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவம் குறித்துக் கலந்துரையாடினர். தொழில்முனைவோர் தங்களது நிதி நிர்வாக நடைமுறைகளை வலுப்படுத்திக் கொள்ளவும், கிடைக்கக்கூடிய நிறுவன ஆதரவு வழிமுறைகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் இக்கலந்துரையாடல் ஊக்கமளித்தது.

“சந்தைகளை இணைத்தல்: வட மாகாண பெண் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தல்” என்ற தலைப்பிலான இரண்டாவது அமர்வில், சந்தை அணுகல், வர்த்தகநாம உருவாக்கம் (Branding), டிஜிட்டல் தளங்களின் இருப்பு, உற்பத்தியின் தரம், பொதியிடல் (Packaging) மற்றும் வாங்குபவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது. பெண் தலைமைத்துவ வணிகங்கள் எவ்வாறு உள்ளூர் சந்தைகளுக்கு அப்பாற்பட்டு நகர்ந்து, தேசிய மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளில் வெற்றிகரமாக ஈடுபடலாம் என்பது குறித்த நடைமுறை நுண்ணறிவுகளை தொழில்முனைவோரும் வணிகத் தலைவர்களும் பகிர்ந்து கொண்டனர். வணிகங்களின் நிலையான வளர்ச்சிக்குத் தொடர்ச்சித்தன்மை, சந்தைக்கான தயார்நிலை, கூட்டுப்பணி மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் (Digital Marketing) ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இக்கலந்துரையாடல் அடிக்கோடிட்டுக் காட்டியது.

இம்மாநாட்டில் பெண் தொழில்முனைவோரின் துடிப்புமிக்க சந்தை வளாகம் (Marketplace) ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இதில் உணவுகள் மற்றும் பானங்கள், கைவினைப்பொருட்கள், ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட ஏனைய பொருட்கள் அடங்கிய 40க்கும் மேற்பட்ட சாவடிகள் (Stalls) காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இச்சந்தை வளாகம் தொழில்முனைவோர் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும், சாத்தியமான வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளவும், புதிய வணிக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் ஒரு மதிப்புமிக்க தளமாக அமைந்தது.

இந்நிகழ்வின் மற்றொரு சிறப்பம்சமாக, வட மாகாணத்தின் 25க்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்ட தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தும் ‘தொழில்முனைவோர் ஆடை அலங்கார அணிவகுப்பு’ (Entrepreneurs Fashion Ramp) அமைந்தது. ஆடைகள், ஆபரணங்கள், கைப்பைகள் மற்றும் உள்ளூர் தயாரிப்புகளை உள்ளடக்கிய இக்காட்சி, பெண் தலைமைத்துவ வணிகங்களின் படைப்பாற்றல், திறமை மற்றும் தொழில்முனைவோர் சாதனைகளைக் கொண்டாடியதுடன், அவர்களுக்கான சந்தை வெளிப்பாட்டையும் அதிகரித்தது.

இம்மாநாட்டில் கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட செயலகங்கள், கைத்தொழில் திணைக்களம், கைத்தொழில் அபிவிருத்திச் சபை, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, தேசிய தொழில்முனைவோர் அபிவிருத்தி அதிகாரசபை (NEDA), தேசிய கடன் உத்தரவாத நிறுவனம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், வவுனியாப் பல்கலைக்கழகம், HATCH, கிரைசலிஸ் (Chrysalis), வட மாகாண கைத்தொழில் சம்மேளனம், கொமர்ஷல் வங்கி, டி.எஃப்.சி.சி வங்கி மற்றும் இலங்கை முழுவதிலுமிருந்து வருகை தந்த வெற்றிகரமான தொழில்முனைவோர் உட்படப் பலதரப்பட்ட பங்குதாரர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வானது தொழில்முனைவோர் நிதி நிறுவனங்கள், அரச முகவர் அமைப்புகள், வணிக ஆதரவு அமைப்புகள் மற்றும் சாத்தியமான சந்தைப் பங்காளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள சிறந்த வாய்ப்புகளை உருவாக்கியது. புதிய சந்தை இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டதுடன், எதிர்கால கூட்டுழைப்பிற்கான வாய்ப்புகளும் அடையாளம் காணப்பட்டன. அத்துடன் தொழில்முனைவோர் தங்கள் வணிகங்களை வலுப்படுத்தவும் வளர்க்கவும் தேவையான நடைமுறை அறிவைப் பெற்றுக்கொண்டனர்.

மாநாட்டின் நிறைவில், இந்த நிகழ்விற்கும் அப்பால் பெண் தொழில்முனைவோருக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதற்கான தங்களின் அர்ப்பணிப்பை ஏற்பாட்டாளர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். GRIT திட்டத்தின் மூலம், LIIN மற்றும் அதன் பங்காளர்கள் வட மாகாணத்திலுள்ள பெண் தொழில்முனைவோர் செழித்து வளரவும், ஆளுமையுடன் வழிநடத்தவும் தேவையான வளங்களையும் ஆதரவையும் உறுதி செய்வதற்காக, இலக்கு வைக்கப்பட்ட திறன் மேம்பாட்டுத் திட்டங்களை ஊக்குவிப்பதற்கும், நிதி அணுகலை வலுப்படுத்துவதற்கும், சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் தொடர்ந்து பணியாற்றுவர்.

இந்த ‘எமேர்ஜிங் வுமன்’ மாநாடு, வட இலங்கை பெண் தொழில்முனைவோரின் அசாத்திய திறனை வெளிப்படுத்தியிருப்பதுடன், உள்ளடக்கிய மற்றும் மீளெழுச்சியுடைய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் கூட்டுச் செயல்பாட்டின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு