2004ம் ஆண்டு இலங்கையை தாக்கிய சுனாமி தனது ஊரான காரைதீவிற்கும் தனது குடும்பத்திற்கும் பெரும் அழிவை ஏற்படுத்திய பின்னர் ஜெயசுமனி சிவசோதி விரக்தியை விட மீள்எழுச்சியை தெரிவு செய்தார்.பூஜ்ஜியத்திலிருந்து தற்போது செழித்துவளரும் லக்ஸ்மி புரொடக்ஸினை உருவாக்கினார்.



2020 இல் ஐநாவின் இலங்கை பெண்கள் ஊடாக இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் நிதி உதவி ஊடாக பயிற்சியையும் முறுக்கு தயாரிக்கும் கருவியையும் பெற்றுக்கொண்டார்.இதனை பயன்படுத்தி தற்போது உள்ளுர் பெண்களிற்கு வேலைவாய்ப்பை வழங்க கூடிய விதத்தில் லக்ஸ் புரொடக்ஸினை வளர்ச்சியடைய வைத்துள்ளார்.
இன்று சிவசோதி வெற்றிகரமான வர்த்தக முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அவரது கதை பெண்களை வலுவூட்டும்போது- குடும்பங்களிலும் சமூகத்திலும் அதற்கு அப்பாலும் மீள் எழுச்சிதன்மை வளர்ச்சிபெறும் என்பதை எடுத்துக்காட்டுகின்றது

un women srilanka
