இலங்கை மத்திய வங்கியின் (CBSL) தரவுகளின்படி, 2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 8.0 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது (தேய்மானமடைந்துள்ளது).
மத்திய வங்கி வெளியிட்டுள்ள அதன் சமீபத்திய ‘வாராந்த பொருளாதார குறிகாட்டிகள்’ (Weekly Economic Indicators) அறிக்கையில், 2026 ஜூன் 26 ஆம் தேதி வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் 8.0 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
மத்திய வங்கியின் நாளாந்த மாற்று விகித அறிக்கையின்படி, கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 26) நிலவரப்படி, அமெரிக்க டொலருக்க்கான கொள்வனவு விலை (Buying rate) ரூ. 332.22 ஆகவும், விற்பனை விலை (Selling rate) ரூ. 341.88 ஆகவும் பதிவாகியுள்ளது.
