சமூக சக்தியின் “ஆயிரம் வேலைத்திட்டம்” தொடர்பான ஆலோசனைக் கூட்டம், இன்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான எனது தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இத்திட்டத்திற்கான நிதி விரைவில் விடுவிக்கப்படவுள்ள நிலையில், திட்டத்தின் பயனுள்ள நடைமுறைப்படுத்தலை உறுதி செய்வதற்காக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

கூட்டத்தில் திட்டத்தின் செயலாக்க நடைமுறைகள், நிதி பயன்பாடு, வாழ்வாதாரத் திட்டங்களுக்கான பயனாளர்கள் தெரிவு, சமூக சக்தி திட்டத்தின் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ள திட்டங்களின் அங்கீகாரம், அவற்றை வாசித்து அனுமதி பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இக்கூட்டத்தில் வேலணை பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், உதவிச் செயலாளர், சமூக சக்தி தலைவர்கள், துறை சார்ந்த அரச உத்தியோகத்தர்கள் மற்றும் வேலணை பிரதேச சபை செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர்.
