கொழும்பு 05 இல் அமையவுள்ள, ஹோம் லேண்ட்ஸ் ஸ்கைலைனின் ‘பெண்டாரா ரெசிடென்சீஸ்’ கட்டுமானப் பணிகளை சீனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனம் (CHEC) ஆரம்பித்தது-கொழும்பு 05 இல் அமையவுள்ள, பிரீமியம் இரட்டை அடுக்குமாடிநிறுவனத்தின் பிரீமியம் இரட்டை அடுக்குமாடி அதிஉயர் குடியிருப்புத் திட்டமான ‘பெண்டாரா ரெசிடென்சீஸ்’ (Pentara Residencies) கட்டுமானப் பணிகளை சீனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனம் (CHEC) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா பெண்டாரா ரெசிடென்சீஸ் வளாகத்தில் நடைபெற்றது.
கொழும்பு நகரின் முக்கிய குடியிருப்புத் திட்டங்களில் ஒன்றான இதற்கான ஆரம்ப விழாவில், CHEC மற்றும் ஹோம் லேண்ட்ஸ் ஸ்கைலைன் நிறுவனங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகள், திட்ட ஆலோசகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வானது, இத்திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு கட்டத்திலிருந்து கட்டுமானக் கட்டத்திற்கு முறைப்படி நகர்வதைக் குறிக்கிறது.
இத்திட்டத்தின் கட்டுமானப் பங்காளியாக, CHEC நிறுவனம் தனது பொறியியல் பலம், உயர் அடுக்குமாடி கட்டுமான நிபுணத்துவம் மற்றும் பெரிய அளவிலான திட்டங்களை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றல் ஆகியவற்றை இதற்காகப் பயன்படுத்தவுள்ளது. கொழும்பின் மிக முக்கியமான, போக்குவரத்து வசதிகள் நிறைந்த நகர்ப்புறப் பகுதியில் இத்திட்டம் அமைவதனாலும், அதன் தொழில்நுட்ப அளவினாலும், பெண்டாரா ரெசிடென்சீஸின் வெற்றிகரமான உருவாக்கத்திற்கு CHEC இன் பங்களிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஹோம் லேண்ட்ஸ் ஸ்கைலைனின் இந்த பெண்டாரா ரெசிடென்சீஸ் குடியிருப்பு வளாகம், கொழும்பின் முதன்மையான நிர்வாக மற்றும் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ளது. இது கொழும்பு சிட்டி சென்டரிலிருந்து (Colombo City Centre) சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திலும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 35 கிலோமீட்டர் தூரத்திலும், கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்திலிருந்து (Port of Colombo Container Terminal) 7.4 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.
பெண்டாரா ரெசிடென்சீஸ் என்பது கொழும்பு 05 இல் உள்ள ஒரு பிரீமியம் இரட்டை கோபுர குடியிருப்புத் திட்டமாகும். இது 31 மற்றும் 41 மாடிகளைக் கொண்ட கோபுரங்களை உள்ளடக்கியதுடன், இதன் மொத்த பரப்பளவு தோராயமாக 87,000 சதுர மீட்டர் ஆகும்.
கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையானது இத்திட்டத்தின் ஒரு முக்கிய முன்னேற்றமாகும். இது CHEC மற்றும் ஹோம் லேண்ட்ஸ் ஸ்கைலைன் நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு உழைப்பை வெளிப்படுத்துகிறது. மேலும், கொழும்பின் மாறிவரும் நகர்ப்புற நிலப்பரப்பிற்கு பங்களிக்கும் வகையில், உயர்தர குடியிருப்புத் திட்டத்தை வழங்குவதில் பங்குதாரர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் இது பிரதிபலிக்கிறது.
இத்திட்டம் குறித்து சீனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் (CHEC) நிர்வாக இயக்குனர் வாங் காங் (Wang Gang) கருத்துத் தெரிவிக்கையில், “ஹோம் லேண்ட்ஸ் ஸ்கைலைனின் பெண்டாரா ரெசிடென்சீஸ் என்பது கொழும்பில் ஒரு முக்கியமான உயர் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பங்காளியாகச் செயல்படுவதில் CHEC பெருமையடைகிறது.
இந்த அளவிலான ஒரு திட்டத்திற்கு வலுவான பொறியியல் ஒருங்கிணைப்பு, ஒழுங்குபடுத்தப்பட்ட திட்ட மேலாண்மை மற்றும் தரம் மற்றும் பாதுகாப்பிற்கான தெளிவான அர்ப்பணிப்பு ஆகியவை தேவைப்படுகின்றன. ஹோம் லேண்ட்ஸ் ஸ்கைலைன் உடனான எங்களது கூட்டாண்மை, உயர் கட்டுமானத் தரங்களை எட்டவும், கொழும்பின் குடியிருப்புத் துறைக்கு நீண்டகால மதிப்பை உருவாக்கவும் என்ற பகிரப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது,” என்று கூறினார்.
இந்த கட்டுமானத் தொடக்கமானது, தொழில்துறை ஈடுபாடு, சப்ளையர்களின் பங்களிப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றின் மூலம் பிராந்திய பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், நகருக்கு உயர்தர செங்குத்து வாழ்க்கை உள்கட்டமைப்பை (vertical living infrastructure) சேர்ப்பதன் மூலம், கொழும்பை ஒரு நவீன நகர்ப்புற மையமாக வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் CHEC இன் தொடர்ச்சியான பங்களிப்பை இந்த நடவடிக்கை மீண்டும் நிரூபித்துள்ளது. சிக்கலான மற்றும் பெரிய அளவிலான திட்டங்களை வழங்கிய அனுபவத்தைக் கொண்டுள்ள CHEC நிறுவனம், சர்வதேச கட்டுமானத் தரங்கள், தொழில்நுட்ப ஒழுக்கம் மற்றும் சிறந்த திட்டச் செயலாக்கம் ஆகியவற்றை நிலைநிறுத்தி, பெண்டாரா ரெசிடென்சீஸை வெற்றிகரமாக வழங்கத் தயாராக உள்ளது.
இத்திட்டமானது கொழும்பின் குடியிருப்பு வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு பங்களிப்பதற்கான CHEC மற்றும் ஹோம் லேண்ட்ஸ் ஸ்கைலைன் ஆகியவற்றின் பகிரப்பட்ட பார்வையை பிரதிபலிக்கிறது. இது நிறைவடையும் போது, கொழும்பு 05 இல் ஒரு அடையாளக் குடியிருப்புத் திட்டமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
